பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?

புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:16 IST)

Widgets Magazine

பாலியல் தொடர்பான பல்வேறு விஷயங்களையும், எந்த மாதிரி தருணத்தில், எத்தகைய சூழ்நிலையில் பாலுறவை வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியெல்லாம் பார்த்து வருகிறோம்.

இந்தப் பகுதியில் பால்வினை நோய் அல்லது எஸ்டிடி (STDs - Sexually transmitted diseases or Venereal diseases - VD) குறித்து பார்ப்போம்.

பால்வினை நோயானது அனைத்து வயதினருக்கும், ஆண்கள் - பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.

இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. பால்வினை நோய் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதால் இந்நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக விடலைப் பருவத்தினருக்கும், இளம் வயதினருக்கும் இந்நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம். எனவே, இந்நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்தல் அவசியம்.

பால்வினை நோய் என்று தெரிந்த உடனேயே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்தல் அவசியம். சிகிச்சை எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், அதுவே ஆண்மையிழப்பு, மலட்டுத்தன்மை போன்ற விபரீத விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தி விடும் வாய்ப்புண்டு.

பால்வினை நோயின் அடுத்தகட்டமே ஹெச்ஐவி / எய்ட்ஸ் என்பதாகும். ஹெச்ஐவி / எய்ட்ஸ் போன்றவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

பால்வினை நோய் இருப்பவர்களுடன் பாலுறவு கொள்வதால் மட்டுமே இந்நோய் பரவி விடுவதில்லை. இந்த தொற்று நோய் இருப்பவர்களுடன் ஸ்கின் டூ ஸ்கின் கான்டாக்ட் எனப்படும் தொடு உணர்ச்சி மூலமாகவும் பரவுகிறது.

மேலும் பாலுறுப்புகள் மூலமாக உறவு கொள்ளாமல், வேறுவகையில் செக்ஸ் வைத்துக் கொண்டால் பால்வினை நோய் ஏற்படாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. பால்வினை நோயை ஏற்படுத்துவது வைரஸ் அல்லது கிருமி என்பதால், உடலில் சிறு கீறல் இருந்தாலும் அதன் மூலம் இந்நோய் பரவி விடும் என்பதே உண்மை.

இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கு பால்வினை நோய் இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை. அதனால் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் மனைவி / கணவனுக்கு அவர்களை அறியாமலேயே எளிதில் நோயை பரப்பி விடுகிறார்கள். வேறு பலர் பால்வினை நோய் இருப்பது தெரிந்தாலும், மற்றவர்களிடம் சொல்வதில்லை.

பால்வினை நோய் வந்த பின் சிகிச்சை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், வரும் முன் காப்பதே சிறந்தது. பால்வினை நோயைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி ஆணுறை எனப்படும் காண்டம் உபயோகிப்பதே.

தவிர, பெண்களாக இருப்பின் அவ்வப்போது மகப்பேறு மருத்துவரிடமும், ஆண்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவரிடமும் பரிசோதனை செய்து, நோய் இருப்பின் அதன் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

மூட்டு வலிக்கு முடிவு

மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த ...

எய்ட்ஸ் பாதிப்பா?

எய்ட்ஸ் பாதிப்பா? கவலை வேண்டாம். வாழ்க்கை முடிந்து விடவில்லை!

வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்று தெரிந்த பிறகு வருகின்ற காசநோய் போன்ற சந்தர்ப்பவாத நோய்களுக்கு ...

மனநோய் ஏன் உண்டாகிறது?

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை பாதிக்கப்படுகிறது. அதேப்போல, பெற்றோரின் அரவணைப்பு ...

Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் அதிகமாவதாக புதிய ஆய்வு

காலை இரவு என்று வெவ்வேறு நேரங்களில் வேலை பார்க்கின்ற ஷிஃப்ட் முறை தொழிலாளிகளுக்கு கூடுதலான ...

கொரியா நாட்டு அக்குபங்சர் மருத்துவர் பங்குபெறும் இலவச சிகிக்சை மற்றும் பயிற்சி வகுப்பு

சென்னையில் கொரியா நாட்டு அக்கு பங்சர் மருத்துவர் கிம் தேவோன் அவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

சோனி சைபர் தாக்குதல் விசாரணையில் பங்கேற்கத் தயார்: வடகொரியா

சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கணினி வலயமைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட ...

இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம்

ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ...

இன்னுமொருவரும் தூக்கிலிடப்படுவார்-பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பேஷாவார் நகரில் செவ்வாயன்று நடந்த பள்ளிக்கூட படுகொலைக்கான பதில் நடவடிக்கையாக, இதுவரை ...

இஸ்ரேல் லெபனானுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்

ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்கள் காரணமாக கடந்த 2006 ஆம் ஆண்டு ...

Widgets Magazine
Widgets Magazine