முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > பாலியல் பிரச்சனைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாலியல் கல்வி கட்டாய பாடமாக வேண்டும்
பாலியல் கல்வியை இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பாடமாக கொண்டு வர வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்களில் பாலியல் கல்வியை பட்டப்படிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும் பாலியல் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

3வது சர்வதேச பாலியல் மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள், ஆரோக்கியமான தம்பதிகள் அவர்கள் விரும்பும்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம். விருப்பப்பட்டால் தினமும் இருக்கலாம். அது பசிவரும் போது சாப்பிடுவது போலத்தான் ஆகும். தாம்பத்திய உறவுதான் மிகச்சிறந்த உடல்பயிற்சி ஆகும். அவ்வாறு அடிக்கடி கணவன் மனைவி உடலுறவு கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருதய நோய்வராமல் தவிர்க்கலாம்.

மாரடைப்பு வரவாய்ப்பு குறைவு. அவ்வாறு இருப்பதால் அவர்கள் மனம் மிகவும் லேசாகி விடும். மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். மன அழுத்தம் குறையும். நிறைய நோய்கள் வராது. சொல்லப் போனால் இளமையுடன் காணப்படுவார்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் பலம் இழந்து காணப்படும். உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். வயாக்ரா மாத்திரைகளை அளவோடு பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் வராது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் கூறினர்.

மாநாட்டையொட்டி ஆகாஷ் குழந்தையின்மை மருத்துவமனை வளாகத்தில் செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு ¨டெபற உள்ளது. இதில் இலவச அனுமதியுடன் சென்று பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கும் விடை காணலாம்.
மேலும்
‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்!
'வயா‌க்ரா சா‌ப்‌பி‌ட்டா‌ல் கேட்கும் திறன் பாதிக்கும்
என் சகோதரனை பிடித்திருப்பதாக
விரைப்பு ஏற்படாமலேயே விந்து வெளியேறி
3 வகள் பெரியவளை திருமணம் செய்யலாமா?
சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவது எப்படி?