என் வயது 20. என் சித்தி மகள் (வயது 13) இரவு என்னிடம் தான் படுத்துத் தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொட்டு உள்ளேன், ஆடையுடன் அவள் மார்பையும் தொட்டு உள்ளேன். நான் அவள் மனதை கெடுத்ததாக நினைக்கிறேன். ஆனால் இதற்கு அவள் ஏன் எந்த எதிர்ப்பும் கூறவில்லை?
ஒரு ஆண் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை தொடும்போது பல பெண்கள் பயத்தால் செயலிழந்து விடுகிறார்கள். அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள உறவினர் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும்போது பல இளம் பெண்கள் திகைத்து நடுங்கி விடுகிறார்கள்.
பயம், அருவெறுப்பு, கூச்சம், குழப்பம் இத்தகைய உணர்வுகளால் தாக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதையே சம்மதம் என்று பல ஆண்கள் எண்ணி தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, வயதில் சிறியப் பெண்களைக் கெடுக்கிறார்கள். பல பாலியல் தவறுகள் நடப்பது நெருங்கிய உறவினர்களால் தான்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் இத்தகைய தவறுகள் எல்லாருடைய வீடுகளிலுமே நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு இளம் பெண்களை யார் வீட்டில் தங்க அனுமதிக்கிறோம். யாருடைய அறையில் தன் பெண் தூங்குகிறாள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இனிமேல் உங்கள் சித்தி பெண்ணுடன் ஒரே அறையில் தூங்க வேண்டாம். அவளாக முன் வந்தாலும் உறுதியுடன் மறுத்துவிடுங்கள். நல்ல நடத்தை வாழ் நாள் முழுவதும் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
|