என் காதலியை அடுத்த மாதம் மணக்க விரும்புகிறேன். ஆனால் அவளுக்கு நான் மற்ற பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என்ற சந்தேகம் இருக்கிறது. இதை தீர்ப்பது எப்படி?
உங்களது செயல், பாவனைகளே உங்கள் காதலியின் சந்தேகங்களை போக்கும். எனக்கு வேறு எந்த பெண்ணிடமும் ஈடுபாடு இல்லை என்று கூறிக்கொண்டே அருகிலுள்ள பெண்ணை நோட்டமிட்டால் காதலியின் சந்தேகத்தை தவிர்ப்பது கடினம். உங்களது நன்னடத்தையையும் மீறி அவள் உங்களை சந்தேகித்தால் திருமணத்தை தள்ளிப் போடுவது நலம். சந்தேகத்தைத் தீர்த்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.
|