தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள்,
எப்போதும் ஏதாவது ஒரு தற்கொலை முறையைப் பற்றி பேசி அல்லது யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
தன்னம்பிக்கையை இழந்தவர்கள் போல அல்லது தனக்கென்று யாருமில்லை என்பது போன்ற ஒரு எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள்.
நடத்தையில் வெகுவாக மாற்றத்தை வெளிப்படுத்துதல்
எப்போதும் இல்லாத அளவிற்கு குடிப்பது அல்லது போதைப் பொருளை உபயோகிப்பது
யாருடனும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல இருப்பது
எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிப்பது
எதிர்கால திட்டங்களைப் பற்றிய எண்ணமோ ஆசைகளோ இல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றாவது தற்கொலை செய்து கொள்ளும் 10 பேரில் 8 பேரிடம் காணப்படும் என்று மனச்சிதைவுத் துறை நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
அதே சமயம், தற்கொலைப் பற்றி அடிக்கடி பேசுதல், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுதல், தற்கொலையில் இருந்து மீட்கும் அமைப்புகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நபர்களில் பாதி பேர் தற்கொலை பற்றிய பயத்தில்தான் அவ்வாறு செய்கிறார்களே தவிர, தற்கொலை செய்து கொள்ள அவர்களுக்கு எள்ளளவும் துணிச்சல் இருக்காது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஒரு வேளை தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை நீங்கள் கண்டால்...
உடனடியாக உங்களது அதிர்ச்சியை அவரிடம் வெளிக் காட்டாதீர்கள்.
திட்டுவதோ அல்லது மற்றவர்களுக்கு தெரிவிப்பதாக எச்சரிப்பதோ பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.
அவருக்கு தைரியமூட்டி அவரது பிரச்சினையை எந்தவித எதிர்வாதமும் இன்றி அமைதியாகக் கேளுங்கள்.
மனநிலையை நீங்களாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். அதற்குரிய மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுதான் ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
அவரை தனியாக விட்டுவிட்டு எங்கும் போக வேண்டாம்.
அவர் மறுத்தாலும் அவருக்குரிய உதவிகளை செய்யுங்கள்.
|