முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  மனோதத்துவம்
 
மனநல மருத்துவர் வேதமாலிகா - நேர்காணல்
வெப்உலகம் : எப்படிப்பட்ட பேஷண்ட்ஸ்களுக்கு ஹிப்னோ தெரபி பயன் தரும்னு கொஞ்சம் விளக்குங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகள், தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பிடிப்பின்மை, பதட்டமான மனநிலை, பிரம்மைகள், காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள், இல்லாத உருவங்கள், அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல், வேலை, கல்வியில் ஈடுபாடின்மை. இதெல்லாம் நாம் உலகத்துக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களால் தோன்றும் மனநோய் அறிகுறிகள்.

ஆனால், இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்பே கருவிலேயே குழந்தைகளுக்கு மனபாதிப்பு ஏற்படுகிறது என்று ஆஸ்டரேலியா, சிட்னியில் உள்ள நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள்.

அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex இதெல்லாம் இருக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல். இதையெல்லாம் கூட ஹிப்னாசிஸ் சிகிச்சையில் குணப்படுத்தலாம். பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா போன்ற அநவேயட னளைடிசனநசகளை ஹிப்னாசிஸ் குணப்படுத்துவதோடு மனநோய் சம்பந்தமான உடல் நோய்களையும் ஹிப்னோ தெரபி குணப்படுத்தும். இதை நாம் பிறகு பார்ப்போம்.

வெப்உலகம் : உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?

டாக்டர் வேதமாலிகா : உடலுக்கும், மனதிற்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. sub-concious என்கிற உள்மனம், இதன் கட்டுப்பாட்டில்தான் தானியங்கி நரம்பு மண்டலங்கள் செயல்படுகிறது. அதனால உள் மனது பாதிக்கப்படுகிறபோது உடல்ரீதியான பிரச்சினைகள் தோன்றும். இதற்கு Psycho-somatic disorderD பேர் வைத்திருக்கிறோம். இதற்கு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் "அல்சர்". நாம் நினைப்பது போல் பசிக்கும் போதுதான் வயிற்றின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும் என்பதில்லை. நாம் கவலைப்படும்போதும், பதட்டப்படும்போதும், அமிலம் சுரக்கும். இதற்கு நாம் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. பயம், பதட்டம் ஏற்படும் மனக் காரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில் ஹிப்னோ சிகிச்சை பொருத்தமானது என்று கூறலாம்.

இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம், அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும்போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது. இதற்கு நாங்கள் ஹிப்னோ தெரபியுடன், மியூசிக் தெரபியும் அளிக்கிறோம். சில ராகங்களுக்கு நோய் தீர்க்கும் சக்திகள் இருக்கின்றன. உதாரணமாக கர்நாடக இசையில் "சூர்யகாந்தம்" என்று அழைக்கப்படும் ராகம் சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடியதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த ராகத்தைக் கேட்பதோடு மன சஞ்சலத்திற்கான காரணங்களையும் கண்டுபிடித்து, ஹிப்னோ சிகிச்சை மூலம் கட்டளைகளையும் செலுத்தினோமானால் ஹிப்னோ சிகிச்சையையும், இசை சிகிச்சையையும் இணைத்து கொடுத்தால் பலன்கள் பிரமாதமாக இருக்கிறது.

1| 2