உயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு - ஆய்வில் தகவல்

புதன், 4 ஏப்ரல் 2012 (14:03 IST)

ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உயரமான பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.

கருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.

உதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.

அல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

News Summary: Taller women are at a greater risk of ovarian cancer, a research led by scientists at the University of Oxford has found after bringing together all the evidence from clinical studies carried out worldwide.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine