இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
மருத்துவ செய்திகள்
»
சுத்தமற்ற காற்று, குடிநீரால் 8 லட்சம் பேர் இறப்பு
(Pure Air | Water| India)
Feedback
Print
சுத்தமற்ற காற்று, குடிநீரால் 8 லட்சம் பேர் இறப்பு
சனி, 21 நவம்பர் 2009( 11:59 IST )
இந்தியாவில் ஆண்டுதோறும், சுத்தமற்ற காற்று, குடிநீரால் பாதிக்கப்பட்டு சுமார் 8 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று எரிசக்தி மற்றும் ஆதாரவள அமைப்பின் (டெரி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெரியின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கிரீன் இந்தியா 2047 என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டன
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்தியாவில் சுத்தமான குடிநீர், காற்று கிடைக்காததால் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதாலும், குடிநீரை குடிப்பதாலும் உருவாகும் நோயால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதம் பாதிப்படைகிறது.
இதை தடுக்க அரசு விரிவான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
டெரியின் தலைவர் ஆர்.கே. பச்சோரி இது குறித்து கூறுகையில், இந்தியாவில் 45 விழுக்காடு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள பல நகரங்களில் காற்றில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இவற்றை தடுக்காவிட்டால் வருங்காலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
சுத்தமற்ற காற்று,
குடிநீரால் 8 லட்சம் பேர் இறப்பு
மேலும்
• ஒட்டிப் பிறந்த குழந்தைகள் அறுவை மூலம் பிரிப்பு
• மருத்துவர் ஜே.அகர்வால் கண்கள் தானம்
• டயரியா கட்டுப்பாட்டில ரோட்டரி சங்கம்
• செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் புதிய கூட்ட அரங்கு
• தான்சானியா சிறுமிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
• மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்