டாக்டர் மோகன் சர்க்கரை நோய் மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்
செவ்வாய், 3 நவம்பர் 2009( 13:50 IST )
webdunia photo
FILE
சென்னையில் உள்ள டாக்டர் மோகன் டயாபடிஸ் ஸ்பெஷாலிடிஸ் சென்டர் மற்றும் மெட்ராஜ் டயாபடிஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இரண்டும் உலக டயாபடிஸ் சம்மேளன கல்வி மையத்தின் (International Diabetes Federation (IDF) Centre of Education) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கான சிகிச்சையில் இணைந்து செயல்படும் மையமாகவும், ஐ.டி.எஃப் கல்வி மையமாகவும், டயாபடிஸ் நோய்க்கான ICMR நவீன மையமாகவும் டாக்டர் மோகன் மருத்துவமனை தற்போது விளங்குவதாக அம்மருத்துவமனை வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.