உலக அளவில் ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகள் அதிக அளவில் காணப்பட்ட போதிலும், இந்தியாவில் 72.5 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரும்பாலும் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுவதாக யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அவசியம் கொடுப்பதன் மூலம் இரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.
உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிகளவில் எடை குறைவான குழந்தைகள் (43 விழுக்காடு) காணப்படுவதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
குழந்தைகளின் ஊட்டச் சத்து, சுகாதாரத்தை சரியான முறையில் பேண வேண்டும் என்கிறார் யுனிசெஃப் அமைப்பின் தமிழகப் பிரதிநிதி டாக்டர் சதீஷ் குமார்.
குழந்தைகள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடை பிடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
|