முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > `வாடகைத் தாய்' முறை- ஓர் அறிமுகம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
`வாடகைத் தாய்' முறை- ஓர் அறிமுகம்!
ஒரு பெண்ணுக்கு மகப்பேறை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது கர்ப்பப் பை என்றால் மிகையில்லை.

பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் தம்பதியரில், ஆணின் விந்தணுவானது பெண்ணின் சினை முட்டையுடன் இணைந்து கரு உருவாகி கர்ப்பப் பை குழாய் வழியாக கர்ப்பப் பையில் சென்று தங்குகிறது.

கருவைத் தாங்கக்கூடிய அளவு கர்ப்பப் பை வலிமை மிக்கதாக இருத்தல் அவசியம். கர்ப்பப் பை பலவீனமாக இருந்து, செயலிழந்து விட்டால் இயல்பான மகப்பேறுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.

கர்ப்பப் பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து குழந்தைப் பேறு அளிக்க முடியும்.

இந்த முறையைத்தான் "வாடகைத் தாய்' என்று அழைக்கின்றனர்.

வெளிநாடுகளில் நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த வாடகைத் தாய் முறை, சமீபகாலமாக இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

சென்னையில் குழந்தையின்மை, மகப்பேறு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சிறப்பான ஆலோசனைகளையும், சிகிச்சையையும் அளித்து வருகிறது.

இந்த மருத்துவமனையின் டாக்டர்கள் ப.காமராஜ், ஜெயராணி காமராஜ் சிகிச்சையை அளிக்கிறார்கள்.
மேலும்
தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள்
ஒருமாத குழந்தைக்கு கட்டி அகற்றம்
இதய பாதிப்புக்கு நவீன சிகிச்சை!
பெண்களே அதிகம் காபி குடிங்க...
உறைந்த கருமுட்டை மூலம் குழந்தைப் பேறு
டி.வி பார்ப்பதால் உயர் இரத்த அழுத்தம்?