முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > ஒருமாத குழந்தைக்கு கட்டி அகற்றம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒருமாத குழந்தைக்கு கட்டி அகற்றம்
பிறந்து ஒருமாதமே ஆன குழந்தைக்கு சிறுநீரகத்துக்கு அருகில் அட்ரினல் சுரப்பியில் இருந்த 5 செ.மீ. அளவுடைய கட்டி அகற்றப்பட்டது.

நுண் துளை சிகிச்சை முறையில் இந்தக் கட்டியை சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கர்ப்பத்தில் குழந்தை இருந்தபோதே, 30-வது வாரத்தில் கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அல்ட்ரா சவுண்ட் (Ultra sound) சோதனை மூலம் கருக் குழந்தையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

குழந்தை பிறந்தவுடன் பச்சிளம் குழந்தை அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும் சிறப்பு மயக்க மருத்துவர்களும் இணைந்து, நுண் துளை சிகிச்சை மூலம் 5 செ.மீ. கட்டியை அகற்றினர்.

சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு நான்கு சிறிய வடுக்களே காணப்படுகின்றன. குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
இதய பாதிப்புக்கு நவீன சிகிச்சை!
பெண்களே அதிகம் காபி குடிங்க...
உறைந்த கருமுட்டை மூலம் குழந்தைப் பேறு
டி.வி பார்ப்பதால் உயர் இரத்த அழுத்தம்?
எகிப்து: ஒரே பிரசவத்தில் 7 குழந்தை!
முகச் சுருக்கங்களைப் போக்கும் தலையணை