முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > பெண்களே அதிகம் காபி குடிங்க...
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பெண்களே அதிகம் காபி குடிங்க...
பெண்கள் தினமும் அதிகளவு காபி குடிப்பதால், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள் என்று சமீபத்தில் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதாவது அன்றாடம் 3 கப் அல்லது அதற்கு மேல் காபி பருகலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஜப்பான் நாட்டின் சுகாதார அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 40 முதல் 69 வயது வரையிலான பெண்களை 15 ஆண்டுகள் வரை கண்காணித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 117 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.

காபி அதிகம் குடிப்பதால் உடலின் இன்சுலின் அளவு குறைவதுடன், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகளும் மிகக்குறைவான விகிதத்திலேயே உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கர்ப்பப்பை புற்றுநோயை குறைக்கும் தன்மை காபிக்கு உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை புற்றுநோய் 4-வது இடத்தை வகிப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
உறைந்த கருமுட்டை மூலம் குழந்தைப் பேறு
டி.வி பார்ப்பதால் உயர் இரத்த அழுத்தம்?
எகிப்து: ஒரே பிரசவத்தில் 7 குழந்தை!
முகச் சுருக்கங்களைப் போக்கும் தலையணை
புற்றுநோய் ஆபத்தைத் தவிர்க்குமா ஆப்பிள்?
பாலூட்டுவதால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு குறைவு