முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > எய்ட்ஸ் நோயாளிகளுக்கு காப்பீடு அறிமுகம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு காப்பீடு அறிமுகம்
எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் ஹெச்ஐவி வைரஸ் உடன் வாழ்வோருக்கான குழுக் காப்பீட்டுத் திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஹெச்ஐவி மற்றும் காசநோயை முறியடிப்பதற்கான பொதுத்துறை - தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் இந்த காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மக்கள்தொகை சேவை அமைப்பின் கீழ் இத்திட்டம் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹெச்ஐவி பாசிட்டிவ் உள்ளோருக்கு காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய எய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கே. சுஜாதா ராவ் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியா முழுவதும் 30 ஆயிரம் எய்ட்ஸ் நோயாளிகள் உட்பட 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹெச்ஐவி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் சிகிச்சைக்கு உதவும் வகையில் இந்த காப்பீடு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கு ஆண்டு பிரிமியம் ஆயிரத்து 500 ரூபாய் என்றும், அரையாண்டுத் தொகை 750 ரூபாய் என்றும் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி. ஜெகன்னாதன் கூறினார்.
மேலும்
உடல்எடை குறைப்பு அறுவைசிகிச்சை அதிகரிப்பு
ஹெட்போனால் இதயநோய் ஏற்படும்
மருத்துவக் குணம் நிறைந்த பாகற்காய்
நீண்டகாலம் வாழ விருப்பமா?
பெரிய இதயம் கொண்ட தடகள வீரர்கள்
மேனிக்கு மெருகு தரும் இளநீர்