உடல் பருமன் அல்லது எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் 20 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.
உடலில் தேவைக்கு அதிகமாகச் சேரும் கொழுப்பே பருமனாக வெளிப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பு விகிதமும் சமீபகாலமாக உயர்ந்திருப்பதாகவும், அதற்கேற்றாற்போல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி கடந்த 1988ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை, உடல் எடையைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 1.2 விழுக்காட்டில் இருந்து 24.2 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்து கொள்வோரில், 90 விழுக்காட்டினர் இடுப்பில் உள்ள சதையை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
அறுவை சிகிச்சையின் போது ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அறுவைசிகிச்சை முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவானதாகவே இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின் சிக்கல்கள் ஏற்படுவது 10 விழுக்காடு மட்டுமே என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
|