நல்லதை யார், எதற்காக சொன்னாலும் சில நேரங்களில் அது கசப்பானதாக அமையும். பின்னர் நல்லதாக முடிந்தவுடன் எதற்காக அப்படிச் சொன்னார்கள்? என்பது தெரியவரும்.
இது பாகற்காய்க்கு மிகப் பொருத்தமானதாக அமையும். பாகற்காய் என்று சொனனவுடன் பலர் முகத்தைச் சுளிப்பார்கள். காரணம் அதன கசப்புத் தன்மைதான். ஆனால், பாகற்காயில் உள்ள மருத்துவ குணத்தை அறிந்து கொள்வார்களேயானால், அவர்கள் அப்படி முகம் சுளிக்க மாட்டார்கள்.
பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய் பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய். நீரிழிவு, ஜூரம், இருமல், மூச்சிரைப்பு, ஆஸ்துமா, மூல நோய், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு ஏற்ற மருந்து பாகற்காய் எனலாம்.
பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.
|