முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > மரு‌த்துவ‌ம் > மருத்துவ செய்திகள் > மேனிக்கு மெருகு தரும் இளநீர்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மேனிக்கு மெருகு தரும் இளநீர்
பொதுவாக இளநீர் எல்லா ஊர்களிலும் கிடைக்கக்கூடிய இயற்கை பானம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இளநீரின் விலை மற்ற பாட்டில் பானங்களை விடவும் சற்றே அதிகம் என்றாலும், அதில் இருக்கும் நன்மைகளுக்காக, அதனை வாங்கிக் குடிப்பதில் தவறில்லை.

உடலை இளமையுடனும், மெருகுடனும் வைத்திருப்பதில் இளநீர் முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.

தினமும் ஒரு இளநீரை காலை நேரத்தில் குடித்து வர வேண்டும். கோடை காலங்களில் எத்தனை இளநீர் வேண்டுமானாலும் பருகலாம்.

உடல் சூட்டினால் சிறுநீர் கடுப்பு ஏற்படுவதில் இருந்து இளநீர் முழு நிவாரணத்தைத் தருகிறது.

பொதுவாக 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இளநீரை எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் அருந்தலாம்.

என்றாலும், குழந்தைகளுக்கு சளி பிடித்திருப்பின் இளநீரைத் தவிர்ப்பது சிறந்தது.

முதியோரில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் டாக்டர்களின் அறிவுரைப்படி இளநீரை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம் .

நாகரீக உலகிற்கேற்றவாறு எத்தனையோ பாட்டில் பானங்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், அவற்றைத் தவிர்த்து நம் பாரம்பரிய பானமான இளநீர், பதநீர் போன்றவற்றை அருந்தினால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. புத்துணர்ச்சியும் தொடர்ந்து இருக்கும்.
மேலும்
குண்டாக இருப்பதற்கு மரபணுவே காரணம்
ஞாபக மறதியைத் தடுக்கும் மீன்
50 வயதுப் பெண்கள் கவனிக்க...
கருப்பை கட்டிகளுக்கு நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை
இரத்த அழுத்தத்தை குறைக்கும் பூண்டு
பிறக்கும் குழந்தைகளில் 10% பேருக்கு நோய்