முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆயுர்வேத மருந்து - கனடா எச்சரிக்கை!
ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அதிக அளவு உலோக சத்து இருப்பதாகவும், இதனை பயன்படுத்த வேண்டாம் என்று கனடா எச்சரித்துள்ளது.

கனடாவில் டோரன்டோ நகரில் வாழும் இரண்டு கனடா இந்தியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சேர்ந்தனர். இவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் போன்ற மாதிரிகள் வான்கூவர் நகரத்தில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா நோய் தடுப்பு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அவர்கள் ஆயர்வேத மருந்து சாப்பிட்டதால் இதிலிருந்து அவர்களின் உடம்பில் காரியம், பாதரசம்,ஆர்சானிக் போன்ற ஆபத்தான உலோக சத்து இருப்பதாக தெரியவந்தது.

கனடா அரசு ஏற்கனவே பல முறை,அங்கீகாரம் பெறாத ஆயுவேத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஆனால் கனடாவில் வாழும் இந்திய வம்சாவ‌ழியினர், இந்தியாவில் இருந்து ஆயுர்வேத மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

வான்கூவர் நகரில் உள்ள மருத்துவமனையில் கனடாவில் வாழும் இந்திய வம்சாவ‌‌ழியைச் சேர்ந்த ஒருவர் வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதாக கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்தத்தை பரிசோதித்த போது, இதில் அதிக அளவு ஆபத்தான உலோக சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நோயாளி, தனது சக்தியை அதிகப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து கொண்டுவந்த ஆயு‌‌ர் வேத மாத்திரையை சாப்பி‌ட்டதாக தெரிவித்தார் என்று மருந்து மற்றும் விஷ முறிவு மையத்தை சேர்ந்த ராப் கேர் தெரிவித்தார்.

மேலு‌ம் கூ‌றிய அவ‌ர், இதே மாதிரி இன்னொரு கனடா வாழ் இந்தியரும் தலைசுற்றல் மற்றும் வயிற்று வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் நீர‌ழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத பொடியை உட்கொண்டதாக கூறினார். அவரது ரத்தத்தை பரிசோதித்ததில், அதிக அளவு விஷத்தன்மை வாய்ந்த உலோக சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மூன்று வாரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது நலமாக உள்ளனர் என்று ராப்கோ தெரிவித்தார்.
மேலும்
இருமல் மருந்துகளுக்கு தடை- மருத்துவர்கள் கோரிக்கை!
69 ‌விழு‌க்காடு குழந்தைகளுக்கு இரத்தசோகை!
செ‌ன்னை‌யி‌ல் மா‌ர்‌ச் 1‌ல் ச‌ர்வதேச மரு‌த்துவ க‌ண்கா‌ட்‌சி!
முதல்முறையாக மாடு, குதிரைகளுக்கு மயக்கம் கொடுக்கும் கருவி!
சென்னை தீவுத் திடல் பொருட்காட்சியில் இலவச சித்த மருத்துவ‌ம்!
ஃ‌ப்ளோ‌ரிடா ரோபா‌ட்டி‌க் மைய‌த்‌தி‌ன் இய‌க்குனராக இ‌ந்‌திய‌ர் ‌நியமன‌ம்!