சென்னை வர்த்தக மையத்தில் ஆர்பிட்ஸ் எக்சிபிஷன்ஸ் நிறுவனம் "மெடிடெக் கிளினிகா 2008' என்ற சர்வதேச மருத்துவக் கண்காட்சியை மார்ச் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடத்துகிறது.
இது குறித்து மருத்துவர்கள் எல்.எஸ்.ஸ்ரீதர், மதன் மோகன் ரெட்டி, கார்த்திக் ராஜகோபால், ஆர்பிட்ஸ் எக்சிபிஷன்ஸ் நிறுவன இயக்குனர் லஜீ ஜரிவாலா, தென் இந்திய இயக்குனர் ரிதேஷ் யாதவ், திட்ட இயக்குனர் எஸ்.கே.சிங் ஆகியோர் கூறுகையில், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவக் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக் கண்காட்சியில் நவீன மருத்துவ சாதனங்கள், நோய் பரிசோதனை கருவிகள், மருத்துவ இன்சூரன்ஸ், ஐ.டி., ஆய்வக கருவிகள், ஆஸ்பிட்டல் சப்ளைஸ், டெலி மெடிசின், டிரேட் மீடியா துறையை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் 110 ஸ்டால்களை அமைக்கின்றன. இந்தியா, கனடா, நைஜீரியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் பார்வையாளர்கள் இக் கண்காட்சியை பார்வையிடுகிறார்கள் என்று அவர்கள் கூறினர்.
|