மக்களின் சர்க்கரை நோயின் தன்மையை மேலும் மோசமாக்குவது நமது உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் அல்லது எரியவைக்கும் ஒரு வகையான புரதக் குறைபாட்டினால் ஏற்படுகின்றது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோலின்ஸ்கா மையம் பின்லாந்து, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆய்வாளர்களுடன் சேர்ந்து சர்க்கரை நோய் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஏற்கெனவே சர்க்கரை நோய் அதிகரிப்புக்கு காரணம் நமது உடலில் உள்ள கண்டறியப்படாத ஒரு வகையான திசுச் செயல்பாடு தான் உடலில் இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதாக அப்போது நடத்திய ஆய்வில் கரோலின்ஸ்கா மையத்தின் பேராசிரியர் ஜூலின் ஆர்.ஜியாரத் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் கண்டறிந்து இருந்தனர்.
இரண்டாம் வகை சர்க்கரை நோய் கணையத்தில் இன்சுலின் சுரப்பு தடைப்படுவதாலும், மேலும் உடலில் உள்ள மற்ற திசுக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாமல் போவதாலும் ஏற்படுகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஏற்படும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகின்றது.
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சோதனையில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ள நோயாளிகளின் உடலில் இன்சுலினின் தன்மை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்ததாகவும், இதற்கு காரணம் ஒரு புதிய மூலக்கூறு இயங்குதல் நடவடிக்கை என்பதுதான் என்று கண்டறிந்துள்ளனர்.
திசுக்களின் இன்சுலின் தன்மையை முறைப்படுத்த தேவையான பொருட்களை வழங்கும் இந்த கொழுப்பு கரைக்கும் திறன் கொண்ட புரதங்கள் பற்றாக்குறை உடலில் உருவாவதே இக்குறைபாடு ஏற்பட காரணமாகும். அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கும், இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்களின் தசைத் திசுக்களில் உள்ள இந்த கொழுப்பு கரைக்கும் திறன் கொண்ட புரதங்கள் முதலில் குறைந்து போகத் தொடங்கும்.
இதனையடுத்து அந்த புரதங்கள் உற்பத்தி செய்து வந்த செரிமான நீர் இல்லாத நிலையில் தசைகளின் சர்க்கரை கட்டுப்படுத்துத் தன்மை குறையும். இதனால் கொழுப்புகளைக் குறைக்கும் திறன் உடலில் தடைப்பட்டு போகின்றது. இந்த நிலையைத் தொடர்ந்து நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊழைச் சதையை அல்லது தொப்பையை உருவாக்குகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது எல்லாம் இந்த புரதங்களின் உளவு குறைகிறது. இரத்த சர்க்கரையின் அளவை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த இயலும். அதன் வழியாக இந்த புரதங்கள் குறைந்து போவதையும் தடுக்க முடியும் என்று பேராசிரியர் ஜூலின் ஆர். ஜியாரத் கூறியுள்ளார். சர்க்கரை நோய் உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கவனமாக முறைப்படுத்தி வரவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
|