முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வயதான கால‌த்‌தி‌ல் உடலை‌ப் பா‌தி‌க்கு‌ம்‌ வி‌ட்‌ட‌மி‌ன்- ஈ குறைபாடு!
வயதானவ‌ர்க‌ளி‌ன் அ‌ன்றாட இய‌ங்குத‌ல் நடவடி‌க்கைக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் தள‌ர்‌ச்‌சி‌க்கு காரண‌ம் ‌வி‌ட்ட‌‌மி‌ன்-ஈ குறைபாடுதா‌ன் எ‌ன்று ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இ‌த்தா‌லி நா‌ட்டி‌ல் உ‌ள்ள ஃ‌பிளார‌ன்‌‌ஸ்-‌ல் 65 வயது ‌நிர‌ம்‌பியவ‌ர்க‌ள் 698 பே‌ரிட‌ம் யே‌‌ல்‌ஸ் மரு‌த்துவ ப‌ள்‌ளி ஆரா‌ய்‌ச்‌சி‌க் குழு‌வின‌ர் பெ‌னிடெ‌ட்டா பா‌ர்டே‌லி தலைமை‌யி‌ல் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்ட அனைவ‌ரி‌ன் இர‌த்த மா‌தி‌ரிகளு‌ம் பெற‌ப்ப‌ட்டு, நு‌ண் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌‌க்களான போலே‌ட், இரும்பு‌ச் ச‌த்து, ‌வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ‌பி-6,‌ி-12, ி, ஈ ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அளவை‌3 ஆ‌ண்டுகளாக தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ளு‌க்கு ‌விரை‌ந்து நட‌த்த‌ல், நா‌ற்கா‌லி‌யி‌ல் இரு‌ந்த ‌திரு‌ம்ப ‌திரு‌ம்ப எழு‌ந்‌தி‌ரி‌த்த‌ல், ‌நி‌ற்கு‌ம் ‌‌திற‌ன் உ‌ள்‌ளி‌ட்ட சோதனைகளை ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் ‌வி‌ட்ட‌‌மி‌ன்-ஈ குறைபாடுதா‌ன் உட‌ல் இய‌க்க நடவடி‌க்கைக‌ள் குறைவது அ‌ல்லது தள‌ர்‌ச்‌சி‌க்கு காரண‌ம் எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்ததாக பெ‌னிடெ‌ட்டா பா‌ர்டே‌லி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ‌வி‌ட்ட‌மி‌ன் -ஈ குறைபாடு இ‌ல்லாதவ‌ர்களை ‌விட அ‌க்குறைபாடு உ‌ள்ளவ‌ர்க‌ள் 1.62 முறை ‌பி‌ன் த‌ங்‌கியு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் போது ப‌ங்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் அனைவருமே அவ‌ர் அவ‌ர் ‌‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற உணவுகளையே சா‌‌ப்‌பி‌ட்டதாகவு‌ம், ம‌‌ற்ற நு‌ண் ஊ‌ட்ட‌ச்ச‌த்து குறைபாடு‌ம் இரு‌க்கலா‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ள அவ‌ர், வயதானவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உண‌வி‌ல் போதுமான அளவு‌‌க்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-ஈ யை சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் இது போ‌ன்ற ‌பிர‌ச்சனைகளை‌த் த‌வி‌ர்‌க்க இயலு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வி‌ட்ட‌மி‌ன்-ஈ குறைபாடு தொட‌ர்பாக ம‌ட்டுமே இ‌ந்த ஆ‌ய்வு மே‌ற்கொ‌ள்ள‌ப் ப‌ட்டதாகவு‌ம், ம‌ற்ற நு‌ணஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் குறைவு தொட‌ர்பாக ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு அத‌ன் முடிவுக‌ள் இதை‌ப் போலவே வரு‌கி‌ன்றதா எ‌ன்று க‌ண்ட‌றிவது அவ‌சிய‌ம் என பெ‌னிடெ‌ட்டா பா‌ர்டே‌லி கூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
தொடர் ஆலோசனை புகைப் பிடித்தலை தடுக்க உதவும்!
அ‌ழி‌ந்து வரு‌ம் 400 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மரு‌த்துவ தாவர இன‌ங்க‌ள் : ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
புகையிலையால் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் உயிரிழப்பு!
ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள நாடுக‌ளி‌ல் இ‌ந்‌தியா முத‌லிட‌ம்
இர‌த்த அழு‌த்த‌த்தை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் மரபணு!
மூளை நர‌ம்‌பி‌ல் இர‌த்த ஓ‌ட்ட‌த்தை தடு‌க்கு‌ம் மரபணு!