புகைப் பிடிப்பவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருவதனால் அவர்களை புகைப் பிடித்தல் பழக்கத்தில் இருந்து விடுவிக்க இயலும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்த கண்டுபிடிப்பு சுமார் 12,000 இளம் வயதினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புகைப் பிடிப்பவர்களுக்கு தொடர்ந்து செவிலியர்கள் ஆலோசனை வழங்கியதின் மூலம் அதிகப்படியான புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை, அப்பழக்கத்தை கைவிடச் செய்ய முடிந்ததாகவும் ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர். இது தொடர் ஆலோசனை பெறாமல் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்றும் வியானே மாநில பல்கலைக் கழகத்தின் செவிலியர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியரும், இந்த ஆய்வின் தலைவருமான வெர்ஜினா ஹில் ரைஸ் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கடுமையான வேலைப் பளுவுக்கும் இடையே செவிலியர்கள் புகைப்பிடிப்பதைக் கைவிடும் படியான அறிவுரைகளை வழங்கி வருவதாக அவர் கூறினார். புகைப்பிடித்தல் பழக்கம் பல்வேறு நோய்களுக்கு ஊட்டச்சத்தாக உள்ளது. இந்த நிலையில் அப்பழக்கத்தைக் கைவிட பணியாற்றுவது இன்றியமையாதது என்றும், தற்போது செவிலியர்கள் செய்து வரும் இந்தப் பணியால் எதிர்காலத்தில் அவர்களின் வேலைப் பளுவும் குறையும் என்று வெர்ஜினா ஹில் ரைஸ் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. புகைப் பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றவர்கள் என்றும், ஆலோசனைப் பெறாதவர்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டதில், ஆலோசனைப் பெறாத இளம் வயதினர் பிரிவில் 3 விழுக்காட்டினரே புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட முடிந்த நிலையில், செவிலியர்களின் தொடர் ஆலோசனைகளைப் பெற்றவர்கள் 15 முதல் 20 விழுக்காட்டினரை புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட வைக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட செய்யும் முயற்சியில் செவிலியர்களின் தொடர் ஆராய்ச்சி நல்ல ஒரு வழியை உருவாக்கியுள்ளது. நம் நாட்டிலும் ஏராளமானோர் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி சங்கடப்பட்டு வரும் நிலையில், செவிலியர்கள் மூலம் இதனைஇங்கும் செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
|