முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இர‌த்த அழு‌த்த‌த்தை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம் மரபணு!
நமது உட‌லி‌ல் புரோ‌ப்‌பி‌லி‌ன்-1 எ‌ன்ற ஒரு மரபணு, இர‌த்த நாள‌ங்க‌ளை தூ‌ண்டுவத‌ன் மூல‌ம் இர‌த்த அழு‌த்த‌த்தை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்வதாக அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ஒஹையோ மாகாண ப‌ல்கலை‌க் கழக ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ள் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

புரோ‌ப்‌பி‌லி‌‌‌ன்-1 ‌-னி‌ன் இ‌ந்த தூ‌ண்டுத‌லா‌‌ல், இர‌த்த நாள‌ங்க‌ளி‌‌ன் பர‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் இர‌த்த ஓ‌ட்ட‌த்தை தடை‌ப்படு‌த்து‌ம் அடை‌ப்புக‌ள் உருவாக ஏதுவா‌கி‌ன்றன. இ‌ந்த டையா‌ல் இருதய‌த்‌தி‌ல் கோளாறுக‌ள், ‌ஸ்ட்ரோ‌க், இர‌த்த ஓ‌ட்ட‌த்‌தி‌ல் ‌சி‌க்க‌ல் உருவா‌கி‌ன்றன. இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ள் இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் பு‌திய நோ‌ய்‌த் ‌தீ‌ர்வு முறைகளு‌க்கு வ‌ழிவகு‌த்து‌ள்ளது. அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக வயது காரணமாக ஏ‌ற்படு‌ம் இர‌த்த அழு‌த்த‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.

இ‌ந்த ஆரா‌ய்‌ச்‌சி ஒஹையோ மாகாண ப‌ல்கலை‌க் க‌ழக‌த்‌தி‌ன் மய‌க்க மரு‌ந்‌திய‌ல் துறை உத‌வி பேரா‌சி‌ரிய‌ர் ஹச‌னி‌ன் தலைமை‌யி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இவ‌ர் இ‌ம்மாகாண டே‌வி‌ஸ் இருதய‌ம் ம‌ற்று‌ம் நுரையிர‌ல் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌ன் ஆ‌ய்வாளராகவு‌ம் உ‌ள்ளா‌ர்.

உய‌ர் இர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த பல நு‌ட்பமான ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ள ‌நிலை‌யிலு‌ம், ‌மிக‌க் குறை‌ந்த அளவே இ‌ந்நோயை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த முடி‌கிறது எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். இதனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த வா‌ஸ்குல‌ர் மறு‌சீரமை‌ப்பு முறை கையாள‌ப்படு‌கிறது. இ‌ந்த முறை‌யி‌‌ன் போது இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் சுவ‌ர் பகு‌திக‌ளி‌ன் தடிம‌ன் அ‌திக‌ரி‌க்க‌ப் படு‌கிறது. இது இர‌த்த ஓ‌ட்ட‌ப் பாதை‌யி‌ன் சு‌ற்றளவை‌க் குறை‌ப்பதுட‌ன் இர‌த்த‌ம் வழ‌க்கமாக செ‌‌ல்லு‌ம் ‌வீ‌ச்சு அளவை‌த் தடு‌க்‌கிறது.

இ‌ந்த புரோ‌ப்‌பி‌லி‌ன்-1 இர‌த்த நாள‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள மெ‌ன்மையான தசை ‌திசு‌க்களுட‌ன் இணை‌ந்து அவ‌ற்‌றி‌ன் அளவை அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் இர‌த்த ஓ‌ட்ட‌ம் நடைபெறு‌ம் பாதை‌யி‌ன் அளவு‌ச் சுரு‌ங்கு‌கிறது. அதனா‌ல் இர‌த்த ஓ‌ட்ட‌த்‌தி‌ன் போது இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் சுவ‌ர்க‌ள் அழு‌த்த‌த்‌தி‌ற்கு உ‌ள்ளாவதுட‌ன், அத‌ன் மே‌ற்பர‌ப்பு சேதமடை‌கிறது. இத‌ன் ‌விளைவு இர‌த்த ஓ‌ட்ட பாதை‌யி‌ல் அடை‌ப்புக‌ள் உருவா‌கி‌ன்றன.
இ‌ந்த நோ‌ய் உருவாகு‌ம் முறை ம‌ற்று‌ம் அது வள‌ர்‌ச்‌சியடையு‌ம் ‌வித‌த்தை‌க் க‌ண்ட‌றிய ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள், மரபணு மா‌ற்ற‌ப்ப‌ட்ட எ‌லி‌யி‌ல் ஆ‌ய்வை மே‌ற்கொ‌ண்டன‌ர். அ‌ப்போது அ‌ந்த எ‌லி‌யி‌‌ன் உட‌லி‌ல் உ‌ள்ள ‌மிருதுவான தசை‌த் ‌திசு‌க்க‌ளி‌ல் ம‌னித உட‌லி‌ல் காண‌ப்ப‌ட்ட புரோ‌ப்‌பி‌லி‌ன்-1 மரபணு அ‌திகமாக உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படுவதை ஆ‌ய்வாள‌ர்க‌ள் க‌ண்டு‌பிடி‌‌த்து‌ள்ளன‌ர்.

இர‌த்த நாள‌ங்க‌ளி‌ல் ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த மா‌ற்ற‌ம் 6 மாத‌ங்க‌ள் க‌ழி‌த்து உய‌ர் இர‌த்த அழு‌த்த‌‌ம் எ‌லி‌‌யி‌ன் உட‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்டதை ஆ‌ய்வாள‌ர்க‌ள் க‌ண்கா‌ணி‌த்த‌தி‌ல் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த இர‌த்த அழு‌த்த‌ம் நடு‌த்தர ம‌னித‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் அளவை ஒ‌த்ததாக இரு‌ந்ததாகவு‌ம் ஆரா‌ய்‌‌ச்‌சியாள‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இ‌‌ந்நோயை‌க் க‌ண்ட‌றிய முத‌லி‌ல் எ‌லி‌யி‌ன் உட‌லி‌ல் நோ‌ய்‌க் ‌கிரு‌மிகளை செலு‌த்‌தி,‌ பி‌ன்ன‌ர் தொட‌ர்‌ந்து எ‌லி‌யி‌ன் உட‌லி‌ல் நோ‌ய் வள‌ர்‌‌ச்‌சியடை‌ந்ததை‌க் க‌ண்ட‌றி‌ந்ததாக அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். வா‌ஸ்குலா‌ர் நோ‌ய்க‌ள், ‌மிருதுவான தசை‌ச் செ‌ல்க‌ளி‌ல் உருவா‌கி இர‌த்த அழு‌த்த‌‌த்‌தி‌ல் ‌சீ‌ர்கே‌ட்டை உருவா‌க்‌கி இருதய நோ‌ய்களு‌க்கு காரணமாக அமைவதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளதா‌ல் இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ள் மு‌க்‌கிய‌த்துவ‌ம் பெறுவதாகவு‌ம் ஆ‌ய்வாள‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மரபணு மா‌ற்ற‌த்து‌க்கு உ‌ட்ப‌ட்ட உ‌லி அ‌திக‌ப்படியான ம‌னித புரோ‌ப்‌பி‌லி‌ன்-1 யை ‌மிருதுவான தசை ‌திசு‌க்க‌ளி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்வதுட‌ன், இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் சுவ‌ரி‌ல் ஒரு ‌விதமான அழு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி ஒ‌ட்டுமொ‌த்த‌த்‌தி‌ல் இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் அமை‌ப்பு முறை, செய‌ல்படு‌ம் முறை‌யிலு‌ம் மா‌ற்ற‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்றன எ‌ன்று ஹச‌னி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புரோ‌ப்‌பி‌லி‌ன்-1 மரபணுவா‌ல் ஏ‌ற்படு‌ம் இர‌த்த ஓ‌ட்ட ஒழு‌ங்கு‌த் தடை ‌சி‌றிது கால‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் இர‌த்த அழு‌த்த‌த்தை உருவா‌க்கு‌கி‌ன்றதா எ‌ன்பது கு‌றி‌த்து மே‌ற்கொ‌ண்ட சோதனை‌யி‌ல், இர‌த்த நாள‌ங்களை‌ச் சுரு‌ங்க‌ச் செ‌ய்யு‌‌ம் நடவடி‌க்கைகளை பரோ‌ப்‌பி‌லி‌ன்- தூ‌ண்டு‌கி‌ன்றன. இதனை‌த் தொட‌ர்‌ந்து வா‌ஸ்குலா‌ர் மறு‌சீரமை‌ப்பு‌ச் செ‌ய்ய வே‌ண்டிய ‌நிலை உருவாகு‌கிறது. நோ‌யி‌ன் வள‌ர் ‌நிலைகளை‌த் தெ‌ரி‌ந்து‌க் கொ‌ள்ளு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் வா‌‌ஸ்குலா‌ர் மறு‌சீரமை‌ப்பை க‌ட்டு‌ப்படு‌த்த இயலு‌ம் எ‌ன்று‌ம் ஹச‌னி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும்
மூளை நர‌ம்‌பி‌ல் இர‌த்த ஓ‌ட்ட‌த்தை தடு‌க்கு‌ம் மரபணு!
செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் கு‌ளி‌ர்சாதன சிகிச்சை அறைகள் ‌திற‌ப்பு!
மஞ்சள் காமாலை தடுப்பூசி போடும் திட்டம்: கருணாநிதி நாளை துவ‌க்கி வைக்கிறார்!
ரோபோ தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்‌தி‌ல் செ‌ன்னை இளைஞ‌ர்களு‌க்கு இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை!
யானை‌க்கா‌ல் நோ‌ய்‌த் தடு‌ப்பு மா‌த்‌திரை இ‌‌ன்று முத‌ல் ‌வி‌னியோக‌ம்!
இருதய நோயை தடுக்கும் முட்டை!