அயோடின் பற்றாக்குறையை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகளவில் லட்சக்கணக்கானோரிடம் காணப்படும் அயோடின் பற்றாக்குறையின் விளைவாக மூளை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வளரும் நாடுகளில் தற்போது 70 சதவீதம் பேரது வீடுகளில் அயோடின் உப்பு பயன்படுத்தப்படும் நிலையில், கடந்த 2002ம் ஆண்டில் இருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் 100 சதவீதம் எட்டப்படவில்லை.
நிபுணர்களின் கருத்துப்படி, உலகளவில் 200 கோடி பேர் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறக்கும் 3.8 கோடி குழந்தைகளுக்குபாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மற்ற காரணங்களை விட, மிக அதிகளவாக வளரும் நாடுகளில் குறைந்தது 20 முதல் 25 சதவீதம் குழந்தைகள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
அயோடின் குறைபாட்டின் தாக்குதலை தடுக்க ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு சிறுகரண்டி அளவே போதுமானது. இந்த அளவே உப்பில் ஆண்டுக்கு 10 சென்ட் வீதம் சேர்க்கப்படுகிறது.
இதற்காக யுனிசெஃப் அமைத்துள்ள பிரத்யேக குழு 20 நாடுகளில் அயோடின் கலந்த உப்பை வழங்குகிறது. அதில் இந்தியா, பாகிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
|