முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மருந்துகளை அறிவுபூர்வமாக பயன்படுத்த பரிந்துரை!
மருந்துகளின் முறையற்ற பிரயோகம் மற்றும் பரிந்துரை ஆகியவற்றால் உலகம் முழுதும் பல்வேறு விதமான உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாக உலக சுகாதாரக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் இன்றைய தினத்தில் மருத்துவர்களால் எழுதிக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கால்வாசி முறையற்ற விதத்தில் பரிந்துரை செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது என்று உலக சுகாதாரக் கழகம் கூறியுள்ளது.

இந்த பிரச்சனை மிகவும் கெடுபிடியாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள உலக சுகாதாரக் கழகம், இந்த பிரச்சனையை விவாதிக்கவென்றே பேங்காக்கில் "மருந்துகளின் அறிவுபூர்வமான் பயன்பாட்டில் கல்வியின் பங்கு" என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கத்தை நேற்று துவக்கியுள்ளது.

கல்வியின் மூலமும் விழிப்புணர்வு திட்டங்கள் மூலமும் மருந்துகளை முறையான விதத்தில் பயன்படுத்துவதை தீவிரமாக நடைமுறைப்படுத்த உலக சுகாதாரக் கழகம் திட்டங்களை வகுக்கவுள்ளது.

இந்த கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் பல்வேறு நாடுகளிருந்து பங்கு பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் மருந்துகள் குறித்த விழிப்புணர்வை நுகர்வோரிடத்தில் ஏற்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த குழுவினர் உதவி புரியவுள்ளனர்.

"மருந்துகள் என்றால் பணம்" என்று இருந்து வரும் விவகாரமும் இந்த கருத்தரங்கில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

மருந்துகள் பரிந்துரை செய்யப்படும் முறைகள் மற்றும் மருந்துகள் சந்தைப்படுத்தப்படும் முறைகள் ஆகியவற்றை நாடு வாரியாக ஒழுங்கு முறைப்படுத்தவும் இந்த கருத்தரங்கில் முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மருத்துவர்கள், மருத்துவ சங்கங்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் ஆகியவை மருந்துகளை முறையாக பயன்படுத்துவது குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகச் சுகாதாரக் கழகத்தின் தென் கிழக்கு ஆசியப் பகுதி மண்டல இயக்குனர் டாக்டர் சாம்லீ ப்ளியன்பேங்சங் கூறுகையில், "மருந்துகள் வெறும் ரசாயனம் மட்டும் அல்ல ரசாயனம் என்பதோடு அதனை முறையாக பரிந்துரை செய்வதற்கான தகவலும்தான்" என்று கூறியுள்ளார்.

ஒரு மருந்தை இன்னொரு மருந்துடன் சேர்த்து தயாரிப்பது என்பது பற்றி பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும், விவாதங்களும் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் சுலபமாக நார்ஃப்ளாக்சசினுடன் டினிடஸோல் என்ற மருந்தை கலப்பது போன்ற அபத்தங்கள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

வளர்ந்த மேலை நாடுகளில் அனுமதி வழங்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட முறையற்ற கலப்பு மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக சி.ஐ.எம்.எஸ் பட்டியலிட்டுள்ளது.

மருந்து உற்பத்தி நிறுவனங்களின் விற்பனைத் தந்திரங்களால் மட்டுமே இந்த மருந்துகள் இந்தியாவில் புழங்கி வருவதாக ஏற்கனவே மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், உலக சுகாதாரக் கழகத்தின் இந்த கருத்தரங்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும்
இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சியை‌க் க‌ண்கா‌ணி‌க்கு‌ம் பு‌திய புரோ‌ட்டி‌ன் க‌ண்டு‌பிடி‌ப்பு!
காது கேளாமைக்கு நவீன அறுவை சிகிச்சை
மூளைக்கட்டி அறிகுறிகளும் சிகிச்சையும்!
பெண்களுக்கு வரும் தைராய்ட் நோய்
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!