முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
 
காது கேளாமைக்கு நவீன அறுவை சிகிச்சை
"150 காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை செய்து சாதனை புரிந்த மெட்ராஸஈ என் டி ரிசர்ச் ஃபவுண்டேஷன்"

பிறந்த உடனே காது கேட்கும் திறனை இழந்த இரண்டரை வயது சிறுவன் சையத் ஹப்ரருக்கு காக்ளியர் இம்பிளாண்ட் (Cohlear Implant) என்ற நவீன அறுவை சிகிச்சை செய்து கேட்கும் திறனை பெற வழிவகை செய்துள்ளது சென்னை மைலாப்பூரில் உள்ள மெட்ராஸஈ என் டி ரிசர்ச்ச் ஃபவுண்டேஷன். இந்த சிறுவனோடு 150 காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்த மருத்துவ மனை.

இந்த நவீன அறுவை சிகிச்சை முறை குறித்து டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறும்போது, "பிறவிக்கோளாறு காரணமாக குழந்தையின் செவித்திறன் பாதிக்கப்படும் நிலையில் பேச்சுத் திறனும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. செவித்திறன் இல்லாத நிலையில் மூன்று வயதுக்குள் காக்ளியர் கருவியை உள்காதுக்குள் புகுத்தி கேட்கும் திறன் அடையச் செய்யலாம்.

மங்களூரைச் சேர்ந்த சையத் ஹப்ரருக்கு பிறக்கும்போதே காது கேட்கவில்லை. அண்மையில் நவம்பர் 27 அன்று காக்ளியர் கருவி பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை காயம் ஆறியவுடன் இன்னும் 10 தினங்களில் இக்கருவியை இயக்கி கேட்கும் திறன் அளிக்கப்பட்டுவிடும். ஒரே ஆண்டில் மற்ற குழந்தைகள் போலவே இந்த குழந்தையும் இயல்பாக பேச தொடங்கிவிடும்" என்றார்.

காக்ளியர் இம்பிளாண்ட் (Cohlear Implant)

காக்ளியர் இம்பிளாண்ட் என்ற எலக்ட்ரிக் சாதனமானது ஒலியில் வரும் எலக்ட்ரிக் சிக்னல்களை காதிலுள்ள நரம்புகள் வழியாக ஒலி அலைகளை கேட்க உதவி புரிவதாகும். பேசுவதற்கும், பேச்சைப் புரிந்து கொள்வதற்கும் இந்த கருவி பேருதவி செய்யக் கூடியதாகும். காதிலுள்ள நரம்பு மண்டலத்தோடு இணைந்து செயல்படுவதற்கு ஏற்றபடி இக்கருவி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் இந்த சிகிச்சை வெற்றிகரமாக 1987 - ல் அமெரிக்க நோயாளி ஒருவருக்கு செய்து முடிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு ஆகும் செலவினம் :

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் செலவு ரூ. 9 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இக்கருவி மீதான தீர்வை ரத்து செய்ததால் தற்போது இந்த செலவு ரூ. 5.5 லட்சமாக குறைந்துள்ளது.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விவரம் :-

குழந்தை பிறந்தவுடன் கே.ஏ.வி. என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் குழந்தையின் செவித்திறனை அறிந்து கொள்ளலாம். இதற்கு ரூ. 500 மட்டுமே செலவாகும் என்கிறார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.

மெட்ராஸஈ என் டி ரிசர்ச் ஃபவுண்டேஷன் :-

சென்னை மைலாப்பூரிலுள்ள மெட்ராஸஈ என் டி ஃபவுண்டேஷன் காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை முறையில் ஆசியாவிலேயே முதலிடம் பெற்று உள்ளது. காது, மூக்கு, தொண்டை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதற்கு இங்குள்ள நவீன சிகிச்சை முறைகளே காரணம்.

ஆடிட்டரி பிரெய்ன்ஸ்டெம் இம்பிளான்டேஷன் சிகிச்சையை செய்த ஒரே தெற்கு, தென்கிழக்கு ஆகிய மருத்துவ மையமாக திகழும் இம்மருத்துவ மையம் தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை மையமாகும்.

குரல் பயனாளிகளுக்கு (வாய்ஸயூசர்ஸ்) முதன் முதலில் இங்கு தான் ஆய்வகம் அமைக்கப்பட்டது. உலக அளவில் அதிகமாக லேசர் சிகிச்சை செய்யப்படும் மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கும் இம்மருத்துவ மனையில் இந்தியாவிலேயே முதன் முறையாக கே பி டி / 532 லேசர் அறிமுகப் படுத்தப்பட்டது. மேலும் குறட்டை சிகிச்சைக்கு உதவும் ஆய்வகத்தையும் இம்மையம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சாதனைகள் புரிந்துள்ள இம்மருத்துவ மையம் தற்போது 150 காக்ளியர் சிகிச்சை செய்த மையம் என்ற பெருமையையும் சேர்த்து தன் சாதனைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அறக்கட்டளையின் மருத்துவ உதவிகள் :

கடந்த வருடத்தில் மட்டும் ரூ. 30 லட்சம் மதிப்பில் காது, மூக்கு, மற்றும் தொண்டை அறுவை சிகிச்சைகள், நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்
மூளைக்கட்டி அறிகுறிகளும் சிகிச்சையும்!
பெண்களுக்கு வரும் தைராய்ட் நோய்
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!
க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ன் பா‌தி‌‌ப்பு குறை‌ந்த அதி நவீன ‌சி.டி.‌ஸ்கே‌ன்!
பு‌ற்றுநோயை குண‌ப்படு‌த்தவ‌ல்ல பு‌திய புரோ‌ட்‌டி‌ன் க‌ண்டு‌பிடி‌ப்பு!