அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட பல கொடிய வியாதிகள் வரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழ்க்கை முழுவதும் போதை தரும் உற்சாக பானங்களை குடித்து வருபவர்கள் தொடர்பாக நடத்திய ஆய்வில், பருவ கால் தொடக்க முதல் இளைஞர் பருவம் வரை அதிகமாக குடிப்பவர்களுக்கு நீண்ட கால வியாதிகளான நெஞ்சவலி, உயர் இரத்த அழுத்தம், இரண்டாம் வகை சர்க்கரை வியாதி, உடலியக்க கோளாறுகள் வரும் என்பது தெரிய வந்துள்ளது. வாழ்க்கையில் பிற்பகுதியில் குடிக்க தொடங்கி மிதமாக குடிப்பவர்களுக்கு ஒரளவு நோய் தாக்கும் அளவு மற்றவர்களை விட குறைவு என்பதும் குடிப்பதைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஆமேபேஃன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் உட்கொள்ளும் ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து பாதிப்பு இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆல்கஹாலை உட்கொள்வதால் உடல் நலத்துக்கு விளையும் கேட்டைத் தெரிந்து கொள்ள, வாழ்க்கை முழுவதும் குடிக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள பசிபிக் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் மார்ஷியா ரஸ்ஸல் கூறுகிறார். பருவகாலம் தொடங்கி இளைஞர் பருவம் வரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் இயக்க முறைகளில் பல்வேறு வகையான எதிர்மறை விளைவுகள் தோன்றுவதற்கான காரணிகள் உருவாகின்றன என்றும் அவர் கூறினார். உறுப்புகளில் வேதியல் மாற்றத்திற்கான இயக்கத்தைத் தடுக்கும் நோய்க் குறியானது நெஞ்சவலி, உறுப்புகள் செயலிழத்தல், இரண்டாம் வகை சர்க்கரை வியாதி ஆகியவை வருவதற்கு அதிக வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. இந்த நோய்க் கிருமியின் உண்மையான பின்விளைவுகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் மரபணு காரணிகள், அதிக உடல் பருமன், போதுமான அளவு உடற்பயிற்சி இன்மை ஆகியவை பாதிப்புக்கான காரணிகளை வலுப்படுத்தும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி 1996-2001 -க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கு நியூயார்க் சுகாதார ஆய்வுக்காக எடுக்கப் பட்ட விவரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிலையில் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்ட 2800 பேரின் விவரங்கள் இந்த ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது இந்த ஆய்வில் உறுப்புகளில் வேதியல் பரிமாற்றத்தை தடுக்கும் நோய்க் கிருமிகள் மேலோங்கி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளுடன் உடல் பருமன், குறைந்த ஹெச்.டி.எல்.கொலஸ்ட்ரால், சீரற்ற இரத்த அழுத்தம், உயர் டிரிக்கிலி செலைட்ஸ், மிக வேகமான குளூக்கோஸ் ஆகியவையும் ஆய்வுக்கு எடுத்துப் கொள்ளப் பட்டது. பருவ கால தொடக்க முதல் குடிப்பவர்களூக்கு மெட்டபாஃலிக் சிண்ட்ரோம் ( உறுப்புகளில் வேதியல் மாற்றத்தை தடுக்கும் நோய்க் கிருமிகள் ) ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
|