விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஸ்டாக்ஹோல்ம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சார்லோட்டா எரிக்சன் என்ற ஆய்வாளர் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக ஆய்வு நடத்தினார். ஸ்டாக்ஹோல்மில் உள்ள அர்லாண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் 2,700 பேரின் உடல்நிலை 1992 முதல் 2004 ஆம் ஆண்டுவரை கண்காணிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தினமும் 50 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். சாதாரணமாக ஒரு மனிதன் உணரத்தக்க ஒலி அளவைவிட 19 விழுக்காடு அதிக ஒலியை அவர்கள் கேட்டதால் மனநிலையில் நெருக்கடி ஏற்பட்டது. இதன்விளைவாக உயர் ரத்த அழுத்தம் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது. குறிப்பாக வயதானவர்கள் இரைச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்தது. வயதானவர்களின் இரைச்சலை அதிகமாகக் கூர்ந்து கவனிக்கின்றனர் என்று எரிக்சன் தெரிவித்தார்.
|