நமக்கு தலைவலி ஏற்படும்போது என்ன செய்கிறோம்? உடனே ஒரு பாரசிடமால் மாத்திரை அதனுடன் சேர்த்து ஒரு காபி எடுத்துக் கொள்கிறோம். நமக்குத் தலைவலி நின்றுவிடுகிறது. ஆனால் உடலில் உள்ள முக்கிய உறுப்பான லிவர் என்று அழைக்கப்படும் ஈரலுக்கு ஆரம்பமாகிறது 'தலைவலி'.
ஆம்! விளைவுகள் தெரியாமல் உடனடி நிவாரணத்திற்காக நாம் செய்துகொள்ளும் சுய மருத்துவம் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரித்தவண்ணம் உள்ளனர். ஆனால் நாம் அவற்றை உதாசீனப்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை.
அதுபோன்றுதான் பாராசிடமால் என்ற வலி நிவாரணி மாத்திரையை நாம் காபியுடன் சேர்த்து எடுத்துக் கொள்கிறோம். இந்த இரண்டின் சேர்க்கையும் ஈரலை பெரிதும் பழுதடையச் செய்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஏசிஎஸ்ந் நச்சியலில் ரசாயன ஆய்வு குறித்த மருத்துவப் பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. எனவே பாரசிடமால் எடுத்துக் கொள்ளும்போது காபியை குறைத்துக் கொள்வது நலம் என்று பரிந்துரை செய்துள்ளது.
பாரசிடமால் எடுத்துக் கொண்டவுடன் அது உள்ளே போய் உடைகிறது. இதனால் உருவாகும் நச்சுப்பொருளின் அளவு நாம் அதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் காபியால் மும்மடங்கு அதிகரிப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
அளவுக்கதிகமான மது அருந்துவதால் உருவாகும் ஈரல் குலைவு நச்சுபொருளூம் பாரசிடமாலை காபியுடன் எடுத்துக் கொள்வதால் உருவாகும் நச்சுப் பொருளும் ஒன்றே என்று ஆய்வாளர்கள் நம்மை எச்சரித்துள்ளனர்.
|