வயிற்றில் தேவையற்ற கொழுப்புச் சத்து அதிகரித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி புற்று நோய்க்கான ரசாயனங்களை உருவாக்குகிறது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வாளர்கள், மேல் வயிற்றுப் பகுதியில் நடைபெறும் நைட்ரைட் வேதியியல் மாற்றங்களில் அஸ்கார்பிக் ஆசிட் என்று அழைக்கப்படும் வைட்டமின் சி மற்றும் கொழுப்பினி ஆகியவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்தனர்.
புற்று நோய்க்கு முந்தைய மாற்றங்கள் மற்றும் கட்டி வளர்ச்சி ஆகியவை மேல் வயிற்றில் அதிகம் ஏற்படுகிறது.
மேல் வயிற்றின் வேதியியல் தன்மைகளை இந்த ஆய்வாளர்கள் அப்படியே மாதிரிப்படி எடுத்தனர். பிறகு பிராண வாயு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் நைட்ரிக் அமில உற்பத்தியான நைட்ரோசமின்கள் ஆகியவற்றின் உருவாக்கத்தை கண்காணித்தனர்.
வயிற்றில் உருவாகும் அமிலங்களின் உதவியுடன் உற்பத்தியாகும் நைட்ரோசமின்கள் புற்று நோயை உருவாக்கும் அபாயத் தன்மைகள் கொண்டது.
ஆனால் நம் உடலில் உள்ள வைட்டமின் சி சத்து நைட்ரைட் அமில உப்பை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றி புற்று நோய் உருவாக்கியான நைட்ரோசமின்கள் உருவாக்கத்தை சிறப்பான முறையில் தடுத்து காக்கிறது.
ஆனால் வயிற்றுக் கொழுப்பு 10 சதவீதம் அதிகரித்தால் வைட்டமின் சி-யே நைட்ரோசமின்கள் என்ற புற்று நோய் ரசாயனத்தை உருவாக்குகிறது என்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
புற்று நோய் உருவாக்கத்தை வைட்டமின் சி குறைப்பதில் தோல்வி அடைகிறது என்ற சமீபத்திய கண்டுபிடிப்பை இந்த புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.
|