மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க மருத்துவ நிர்வாக தகவல் மையம் அமைக்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு செயலர் தாவிதர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த புதிய திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கணினி மூலம் இணைக்கப்படும் என்றார்.
மேலும், மருத்துவமனைகளின் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும், மருத்துவ சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். வெளி நோயாளிகளின் விவரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரம் இதன் மூலம் சேகரிக்கபடும் என்று கூறினார்.
இந்த புதிய திட்டம் முதல் கட்டமாக 38 அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
|