முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > மருத்துவ செய்திகள்
 
20 விழுக்காடு மக்கள் குடல் வயிறு சம்மந்தமான புற்றுநோயினால் பாதிப்பு
Webdunia
இந்தியாவில் 20 விழுக்காடு மக்கள் வயிறு, குடல் சம்மந்தமான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக லோட்டஸ் தோல் அறுவை சிகிச்சை மையத்தின் நிறுவனத் தலைவர் சத்திஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் 25 லட்சம் பேர் பல்வேறு புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

20 விழுக்காடு மக்கள் வயிறு, குடல் சம்மந்தப்பட்ட புற்றுநோயினால் பாதித்துள்ளனர் என்றும், ஒவ்வொறு ஆண்டும் பத்து லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாக கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மக்கள் மத்தியில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறித்திய அவர், புற்றுநோய் குறித்த 3 நாள் கண்காட்சியை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பதாக அவர் கூறினார்.

இக்கண்காட்சி நாளை தொடங்க இருப்பதாகவும், இதில் புற்று நோய் வகைகள், அவை ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விளக்கப்படும் என்றார். புற்று நோய் எல்லா தரப்பினருக்கும் வரும் என்றும், குறிப்பாக 40 வயதினருக்கு மேல் உள்ளவர்களை இந்நோய் அதிக அளவில் தாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும்
தவறான சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு
மருத்துவமனைகளில் ஆய்வு: அன்புமணி
நலமுடன் வாழ... நடந்தால் போதும்!
காச நோயைக் கட்டுப்படுத்த ரூ.110 கோடியில் இரண்டு திட்டம்!
சிக்குன் குனியா பாதித்த மாநில அமைச்சர்கள் கூட்டம்
லெட்ரோசோல் கருப்பை புற்றுநோய்க்கும் சிறந்த மருந்துதான்!