முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  மருத்துவ செய்திகள்
 
காச நோயைக் கட்டுப்படுத்த ரூ.110 கோடியில் இரண்டு திட்டம்!
Webdunia
காசநோய் (டி.பி.) பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ரூ.110 கோடி செலவில் இரண்டு பெரும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது!

காச நோயால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்து 40 ஆயிரம் நோயாளிகளில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்து வாயிலாக 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் காப்பாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.

இத்திட்டத்தினால் 80,000 பேரின் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேச காசநோய் தடுப்பு சீரமைக்கப்பட்ட திட்டம் (ஆர்.என்.டி.சி.பி.) ஐந்தாண்டு காலத்திற்கு, அதாவது மார்ச் 2012 ஆம் ஆண்டு வரை சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் மற்றொரு திட்டத்தின் பெயர் அரசு -தனியார் கூட்டுத் திட்டமாகும் (பி.பி.எம்.).

உலகளாவிய அளவில் எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகியவற்றை தடுப்பதற்கான நிதியத்தின் உதவியுடன் இந்திய மருத்துவ சங்கம் 2வது திட்டத்தை ஆந்திரா, சண்டிகர், ஹரியானா, மராட்டியம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தும். (யு.என்.ஐ.)
மேலும்
சிக்குன் குனியா பாதித்த மாநில அமைச்சர்கள் கூட்டம்
லெட்ரோசோல் கருப்பை புற்றுநோய்க்கும் சிறந்த மருந்துதான்!
இந்த ஆண்டிலேயே எய்ட்ஸ் சட்டம் : அமைச்சர் அன்புமணி!
சிக்குன் குனியாவை தடுக்க: 7 கோடி: கருணாநிதி
நீரிழிவு, மனநோய், மாரடைப்பு அதிகரிக்கும் அபாயம் : அன்புமணி!
காந்த மருத்துவம்