பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துவதற்காக அளிக்கப்படும் லெட்ரோசோல் மருந்து கருப்பை புற்றுநோயை குணப்படுத்துவதிலும் சிறந்ததாக உள்ளதென ஆய்வில் தெரியவந்துள்ளது!
இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லெட்ரோசோல் மருந்து அளித்ததன் மூலம் அவர்களின் வாழ்க்கை 3 ஆண்டுகள் அதிகரித்துள்ளதை கண்டுள்ளனர்.
புற்று நோயின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஆஸ்ட்ரோஜனை லெட்ரோசால் மருந்து நன்கு கட்டுப்படுத்துகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கருப்பை புற்று நோய்க்கு லெட்ரோசலைக் கொண்டு அனைவரையும் குணப்படுத்திவிட முடியாது என்றாலும், பல ஆயிரக்கணக்கான கருப்பை புற்று நோய் நோயாளிகளை காப்பாற்ற முடியும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
வெளியில் தெரியாமலேயே வளர்ந்து கொல்லக்கூடிய வியாதியான கருப்பை புற்றுநோயை படுவேகமாகப் பரவச் செய்யும் ஆஸ்ட்ரோஜனை லெட்ரோசால் கட்டுப்படுத்துவதை கண்டுபிடித்திருப்பதே நல்ல முன்னேற்றம் என்று கூறப்படுகிறது. (ஏ.என்.ஐ.)
|