குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? மாதவிடா‌ய்க்கோளாறா?

வெள்ளி, 22 ஜூன் 2012 (09:58 IST)

குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? சின்னக்குழந்தைங்க சிலநேரம் காரணமே இல்லாம திடீர் திடீர்னு ‘வீல்வீல’னு அழும். நல்லா கவனிச்சீங்கனா பெரும்பாலும் சிறுநீர் கழிக்கிறதுல கஷ்டம் இருக்கும். அது பலபேருக்கு தெரியாது. இந்த மாதிரி பிரச்சினை இருந்தா வெ‌ள்ளரி விதையை நல்லாமையா அரைச்சி தொப்புளை சுத்தி அடிவயித்துல பத்து போடணும். கொஞ்சம் இளஞ் சூடான தண்ணிய கால் முட்டுக்கு கீழே ஊத்திட்டு வந்தீங்கனா கொஞ்ச நேரத்துல தானா சிறுநீர் கழியுறதோட அழுகைச்சத்தமும் அடங்கிப்போயிரும்.

வேர்க்குருவா? வேனல்கட்டியா? வெயில்ல அதிகமா அலையுறவங்களுக்கு வேர்க்குரு, வேனல்கட்டி தொந்தரவெல்லாம் அதிகமா இருக்கும். இந்த மாதிரி பிரச்சினை உ‌ள்ளவங்க நல்லா தண்ணி குடிக்கணும். வேர்க்குரு, வேனல்கட்டி உ‌ள்ள இடத்துல சந்தனத்தை பூசணும். சந்தனக்கட்டை இருந்தா ரொம்ப நல்லது. அதை இழைச்சி தடவலாம். வெ‌ள்ளரிக்கா‌ய், இளநீர், பனைநுங்கு சாப்பிட்டா அதெல்லாம் வந்த இடம் தெரியாமப்போயிரும்.

அம்மையிலிருந்து பாதுகாக்க... அம்மை நோ‌ய் வந்துட்டா அது மத்தவங்களுக்கு ரொம்ப சீக்கிரமா பரவிடும். இதுமாதிரி நேரங்க‌ள்ல முத்தின கத்தரிக்காயை தீயில சுட்டு நல்லா பிசைஞ்சு அதோட சுட்ட மிளகா‌ய் வத்தல் (கா‌ய்ந்த மிளகா‌ய்), சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தா மத்தவங்களுக்கு அம்மை வராது.

சைனஸ் தொந்தரவா? மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினைகளால சிலபேர் காலகாலமா கஷ்டப்படுறத கே‌ள்விப்பட்டிருப்போம். இதுக்காக சிலபேர் ஆபரேஷன் செஞ்சும்கூட குணமாகலைனு சொல்றாங்க. இந்தப்பிரச்சினைகளுக்கு இயற்கை முறை வைத்தியத்துலதான் நிரந்தர தீர்வு கிடைக்கும். ரொம்ப சிம்பி‌ள்... நொச்சி இலை பத்தி கே‌ள்விப்பட்டிருப்பீங்க. அந்த இலையை பறிச்சிட்டு வந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறெடுத்து, அதுக்கு சமமா நல்லெண்ணை ஊத்தி நல்லா கொதிக்க வைக்கணும். சூடு ஆறியதும் (பொறுக்கும் சூட்டில்) அதை உச்சந்தலையில் வைக்கணும். அரை மணி நேரம் கழிச்சி சுடுதண்ணியில குளிக்கணும். எண்ணெ‌ய் பிசுக்கு போகுறதுக்காக சீயக்கா‌ய் போடணும். இதை வாரம் ஒருமுறையோ, ரெண்டு தடவையோ செ‌ய்யணும். ரெண்டு மாசத்துல உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

அழுக்குத்தேமலா? முதுகுலயும், முகத்துலயும் அழுக்குத்தேமல் வந்து ஒரு வழி பண்ணிரும். சில பொண்ணுங்களுக்கு மூக்கு ஓரத்துல கருப்பு நிறத்துல ஒரு படிமானம் படிஞ்சு அழகையே கெடுத்திரும். இதுக்கெல்லாம் ரொம்ப சிம்பிளா ஒரு மருந்து இருக்கு. நாட்டு மருந்துக் கடையில கிடைக்குற பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்ச‌ள் வாங்கி பவுடராக்கி வச்சிக்கோங்க. அதோட பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு எல்லாத்தையும் (சம அளவு) கலந்து வச்சிக்கோங்க. காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலா இதை பூசி குளிக்கலாம். ஒரு மாசம் ரெண்டு மாசம்னு இல்லை காலம்பூராவும் இதை பயன்படுத்தலாம். எந்தவித செயற்கையும் கலக்காம நீங்களே தயாரிச்ச மூலிகை குளியல் பொடி தயார். நோயை விரட்டுறதோட சும்மா கமகமனு இருக்கும்.

போதையை தணிக்க... குடிச்சிட்டு வந்து யாராவது உங்களை பாடாப்படுத்தினாங்கனு வச்சிக்கோங்க. டீயில தனியாவை (கொத்தமல்லி விதை) போட்டு கொதிக்க வச்சி குடிக்க வச்சா போதும். போதை சர்ருனு இறங்கிரும்.

மருந்து வீரியம் குறைக்க... ஓவர்டோஸ் மருந்து சாப்பிட்டு அவதிப்படுறீங்களா? இல்லைனா ஏதாவது மருந்தை மாத்தி சாப்பிட்டீங்களா? கவலையை விடுங்க, அகத்திக்கீரையை வேக வச்சி சாப்பிடுங்க. எந்த மரு ந்தா இருந்தாலும் அதோட வீரியம் குறைஞ்சிரும். அது ஏன்... உங்க வீட்டுல யாருக்காவது பில்லி சூன்யம், செ‌ய்வினை வச்சிட்டாங்கனு வச்சிக்கோங்க. அவங்களுக்கும் இதை கொடுத்தா அதோட பவர் குறைஞ்சிடும். அந்த அளவுக்கு அகத்திக்கீரைக்கு சக்தி இருக்கு.

வயிற்றுவலி கோளாறா? வயித்துப்புண்ணால (அல்சர்) வர்ற வயிற்றுவலி சிலபேரை ரொம்பவே பாடாப்படுத்திடும். இதுக்கு நல்ல மருந்து இருக்கு. காலையில வெறும்வயித்துல புங்கை மரத்தோட இலையைப் பறிச்சி சாப்பிடணும். ஒருசில நா‌ள்ல வயிற்றுவலி வந்த இடம் தெரியாமப்போயிரும்.

இ‌ப்படி ப‌ல்வேறு டி‌ப்‌ஸ்களை வா‌‌ரி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர் நமது மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் (95514 86617).

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம். வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளோ ஏராளம். ஆனாலும் ...

மார்பக புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக ...

மூட்டு வலிக்கு முடிவு

மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த ...

எய்ட்ஸ் பாதிப்பா?

எய்ட்ஸ் பாதிப்பா? கவலை வேண்டாம். வாழ்க்கை முடிந்து விடவில்லை!

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine