ஆவாரை வேர்ப்படை, விஷ்ணுகிரந்தி இலை இந்த இரண்டையும் எலுமிச்சை அளவு அரைத்து பசும் பாலில் கலந்து 3 நாட்கள் குடிக்க, இரத்தம் கலந்து வருகின்ற வெள்ளை நோய் குணமாகும்.
ஆவாரைக் கொழுந்து, பூ, பட்டை இவற்றுடன் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் அறுகின் வேர் சூரணம் சேர்த்து அரைத்து, அதில் இரு விரல் அளவு எடுத்து அதை பசு நெய்யில் கலந்து 48 நாட்கள் உட்கொண்டுவர உள்மூலம் குணமாகும்.