பிரண்டையை நெய்விட்டு வதற்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும்.
பிரண்டை, கற்றாழை வேர்,நீர் முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள் மூலம் குணமாகும்.
எலும்பு முறிவுக்கு, பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி, பொடியாக்கி, நெய் விட்டு லேசாக வறுத்து 1-2 கிராம் அளவு காலை மாலை ஆகிய இரு வேளை உட்கொண்டுவர, முறிந்த எலும்புகள் விரைவில் கூடும்.
பிரண்டையை சிறுந்தீயில் இட்டு வதக்கி சாறு பிழிந்து 20 - 30 மில்லி அளவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும்.