மாதவிலக்கு வலி குறைய

செவ்வாய், 27 அக்டோபர் 2009( 15:02 IST )
மாதவிலக்கு சமயங்களில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை அதிக அளவில் பெண்கள் சாப்பிடுவார்கள். இதற்கு வலி நிவாரணிகள் உகந்தது அல்ல.
இதற்கு பிரண்டை உப்பு நல்ல தீர்வு அளிக்கும். நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு என்று கேட்டு வாங்கி வைத்திருங்கள்.
இதனை தினமும் 250 மில்லி கிராம் அளவிற்கு எடுத்து வெண்ணெயில் குழைத்து தினமும் இரு வேளை உட்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி பெருமளவு குறையும்.
இதேப் பிரண்டை உப்பை 200 மில்லி கிராம் அளவு எடுத்து, ஜாதிக்காய் சூரணம் 500 மில்லி அளவுடன் நெய்யில் குழைத்து இரு வேளை சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.