முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஹோமியோபதி
 
பல் போனால் சொல் மட்டுமா போகும்?
Webdunia

பல் போனால் சொல் போச்சு - இது நம் பழமொழி. பல் ஏன் போகிறது? பல் போனால் சொல் மட்டும்தான் போகுமா? பல்லுக்கும் மூளை, இருதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் தொடர்பு உண்டு. பல் வலியை அலட்சியப்படுத்தினால் பேராபத்தில்தான் போய் முடியும். எனவே, பல்வலி வந்தவுடன் சிகிச்சை எடுக்க வேண்டும்.

இன்று பல் வலிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு சித்ரவதையாக உள்ளது. பல் புடுங்குதல், பல்லை அடைத்தல், ரூட் கேனால் சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பினும், இதில் ஏதேனும் சிறு தவறுகள் நேர்ந்தாலும் அதன் எதிர்விளைவுகள் அபாயகரமானது. எனவே, பல்வலியையும் அதற்கான சிகிச்சைகளையும் அலட்சியப்படுத்தவே கூடாது.

ஹோமியோபதி மருத்துவருக்கும் பல் வலிக்கும் என்ன தொடர்பு? பல்லைப் பிடுங்கவோ, பல்லைப்பொருத்தவோ பற்குழிகளில் சிமெண்ட்டை அடைக்கவோ அவரிடம் கருவிகள் இருக்காதே!

இது உங்களைப் போலவே பலர் கேட்கும் கேள்விகள். ஆனால், வேறு எந்தத் துறை மருத்துவத்தை விடவும் ஹோமியோபதியில் பல்வலி, ஈறு கொப்புளங்கள், ஈறு ரணம், பற்சிதைவு முதலிய சீர்கேடுகளைக் குணப்படுத்த முடியும்.

சிகிச்சை :

ஹோமியோபதி மருந்துகளைப் பல்வலிக்குக் கொடுக்கும் முன்பு, நோய்க்குறிகள் மற்றும் அவை போன்ற அடையாளங்களை அறிந்துதான் கொடுப்பார்கள்.

1. தீவிர பல்வலிக்கு :

ஆரஸ் அல்ப் : பல்வலி உச்சக்கட்டத்தை அடைவது நள்ளிரவில்தான். சில நோயாளிகளுக்குப் படுக்கும் முன்பே தொடங்கிவிடும். வலி அவர்களைப் படுக்க விடாது. பதட்டத்தோடு முக்கலும் முனகலுமாக நடந்து திரிவார்கள். கன்னம் வீங்கியிருந்தால் இந்த மருந்து பயன்படாது. இதயம் துடிப்பது அதிகரித்தால், மாதவிடாய்க்கு முன்னோ பின்னோ பல்வலி வந்தால் ஆர்செனிக் நல்ல பலன் தரும்.

2. பற்குழியில் வீக்கம் :

பெல்லடோனா : பற்குழியில் வீக்கம் காரணமாக வரும் பல்வலிக்கு இது உகந்தது. பல்வலி குத்தி எடுப்பது போலவே விண் விண் என்று தெறிப்பது போலவோ இருக்கும். வலி கடுமையாக இருக்கும். அப்போது இந்த மருந்து துரிதமாக வேலை செய்து குணமளிக்கிறது.

3. கன்னத்தில் வீக்கம் :

சமோமில்லா. பல்வலி இரவு மிகக் கடுமையாகும். வலி வாயைக் கிழிப்பது போலிருக்கும். எதையாவது சாப்பிட்டாலோ, குடித்தாலோ, வெது வெதுப்பான சூடுபட்டாலோ வலி அதிகரிக்கும். கன்னத்தில் வீக்கம், இடைவிடாது எச்சில் ஊறுதல், அதிகமான நடுக்கம், படபடப்பு, அழுகை, கோபம் ஆகிய வெளிப்பாடுகளுக்கு ஏற்ற மருந்து இது.

4. விட்டுவிட்டுப் பல்வலி :

காஃபிய கருடா. விட்டு விட்டுப் பல்வலி. வெடுக் வெடுக்கென பிடுங்கும் இவ்வகை சரியான அறிகுறி. குளிர்ச்சியான நீரை வாயில் வைத்திருந்தால் வலி குறைவது போல் தோன்றும். வாய்சூடு ஏறி நீர் வெதுவெதுப்பாக மாறும்போது மீண்டும் வலி. உறக்கம் வராது. இதற்கு இம்மருந்து ஏற்றது.

5. ஊசி குத்துவது போல் வலி :

வலி ஊசிபோலக் குத்தும். குடையும். பல்லோடு நிற்காமல் காது, நெற்றி என்று பரவும். சூடாகவோ... வெது வெதுப்பாகவோ பற்களில் எது பட்டாலும் வலி கூடும். கன்னத்தில் சூடாக ஒத்தடம் கொடுத்தால் இதமாகத் தென்படும். நாக்கிலும் இவ்வகை வலியின் சின்னம் காணலாம். நாக்கு தடித்து, நீர் ஊறி நிற்கும். வாய் நாறும் அதற்கு `மெர்க்குரியஸ் சொலுபுலிஸ்' என்ற மருந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

6. பல்வேர்களில் வலி :

மெர்க் விவ். பல்வேர்களில் ரணம், வலி, ஈறு சிவந்து, வீங்கி, ரணத்துடன் காணப்படும். வாய் நாறும். இவ்வகைக்கு மேற்கண்ட மருந்து கொடுத்தால் வலி நிற்கும்.

7. விடியற்காலை பல்வலி :

விடியற்காலையில் வலி உச்சம். குளிர்ந்த காற்றோ, குளிர்ந்த நீரோ வாயில் பட்டதும் பல்வலி கடுமையாதல். மிக்க கொடுமையான குத்திக் குத்தி எடுக்கும் வலி. அதற்கு `நக்ஸ் வாமிகா' என்ற மருந்து குணம் தரும்.

பற்சிதைவைத் தடுப்பது குறித்து செய்ய வேண்டியது... கூடாதது... சில குறிப்புகள்
ஆதாரம் - - டாக்டர் ஆர். குமரேசன்
மேலும்
ஹோமியோபதி பார்வையில் எய்ட்ஸ்
அறுவைச் சிகிச்சையின்றி கண்புரைச் சிகிச்சை - டாக்டர் பி.கே. ஜெயராமன்
முடிவுக்கு வரட்டும் முதுகுவலி
ஒற்றைத் தலைவலி
மூலத்தை குணமாக்கும் ஹோமியோபதி
உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்யலாம்!