|
|
|
முடிவுக்கு வரட்டும் முதுகுவலி
|
|
|
|
|
|
Webdunia
|
|
|
|
|
|
|
|
|
|
எலும்புக்கூடு இல்லாத மனிதனைக் கற்பனை செய்து பார்த்தால் அது ஒரு சதைப்பிண்டக் குவியலாகத்தானே இருக்கும்! எலும்புக்கூடுதானே நமக்கு உருவத்தைத் தருகிறது. அதிலும் வீரமில்லாதவனை `முதுகெலும்பு இல்லாதவன்' என்கிறோம் என்றால் வீரத்தின் அடையாளம் முதுகெலும்பு அல்லவா. அந்த முதுகெலும்பு வலி கொடுக்கத் தொடங்கினால் நம் தைரியமே பழுதுபட்டுப் போய் விடும் என்பதில் சந்தேகம் என்ன?
உடலின் பிற பகுதி எலும்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது முதுகெலும்பை பாதிக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது.
ஆர்த்தரைடிஸ் எனப்படும் மூட்டு வீக்கம், காசநோய், மற்றும் சொரியாஸிஸ் எனப்படும் தோல் நோய் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் முதுகுவலி தோன்றலாம்.
Auto Immune Disease - ஆலும் முதுகெலும்பு மூட்டுகளில் வலி ஏற்படலாம். அதிகம் உபயோகப்படுத்தப்படும் எலும்புகளின் தேய்மானத்தால் மட்டுமல்ல அதிக வளர்ச்சியாலும் கூட வலி ஏற்படலாம். இன்று வயதானவர்கள் பலரிடமும் இவ்வலி காணப்படுகிறது. நம் உடலுக்கு ஏற்படும் தேய்மான பாதிப்புகளைச் சரிசெய்து கொள்ளும் தன்மை உடலுக்கே உண்டு. ஆனாலும் இம்மாற்றம் அதாவது வளர்ச்சி முழுமையடையாத நிலையிலும் அல்லது அதிகமான வளர்ச்சி ஏற்பட்டு விட்ட நிலையிலும் முதுகுவலி ஏற்படலாம். அதிகம் வளர்ந்து அருகில் உள்ள பிற எலும்புகளின் உராய்வினாலும் அழுத்தத்தினாலும் வலி தோன்றக் காரணமாகிவிடுகிறது.
கருப்பைப் பகுதியில் கிருமிகள் தாக்கினாலோ, கட்டிகள் தோன்றினாலோ முதுகுவலி வரலாம். அடிக்கடி கருக்கலைப்புச் செய்வதும், கருவுற்று இருக்கும் போது பிரசவத்திற்குப் பின்பு சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளாததும் முதுகுவலியை விலை கொடுத்து வாங்குவது போலாவதும் உண்டு.
சிறுநீரகத்தில் கல் உற்பத்தியானால் அதில் வலிதோன்றி அது அங்கிருந்து பக்க வாட்டில் நகர்ந்து முதுகுவலியாக மாறுவது உண்டு.
நம்மைப் படாதபாடுபடுத்தும் இந்த முதுகு வலியை வராமல் தடுத்துக் கொள்ள என்ன செய்யலாம்?
நாம் நிற்கும்போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நம் உடல் பாரம் பரவலாகவும் சமமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அதிக அழுத்தமோ பாரமோ கொடுப்பது காலப்போக்கில் வலியை ஏற்படுத்தி விடும்.
வீட்டில் டி.வி. பார்க்கும்போதும், அலுவலகத்தில் சேரில் அமர்ந்து பணி செய்யும் போதும் முதுகெலும்பை மிகவும் வளைத்த நிலையில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஒரு காலில் மட்டும் உடல் பாரத்தைத் தாங்கி நிற்பதையும் தவிர்ப்பது நல்லது.
நமது சக்திக்கு மேற்பட்ட பாரங்களைக் கீழே இறக்குவதையும், தூக்குவதையும் கைவிட வேண்டும். அதிக அளவு உடல் உறவும், சுய இன்பப் பழக்கமும் கூட ஆண், பெண் வேறுபாடின்றி முதுகுவலியை ஏற்படுத்திவிடும். எனவே இப்பழக்கங்கள் ஒரு வரம்பைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக முறையான உடற்பயிற்சி முதுகுவலியை அண்டவிடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஹோமியோபதி மருத்துவத்தில் முதுகுவலிக்கென்று பல மருந்துகள் உள்ளன. வலியின் காரணம், அதன் தன்மை, பாதிக்கப்பட்ட இடம், பாதிக்கப்பட்டவரின் பிற கோளாறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மருந்துகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரஸ்டாக்ஸ், நக்ஸ்வாமிகா, பிரையோனியா, லாக்னந்தஸ், செலிடோனியம், அஸ்குலஸ், ரூடா, ஆர்னிகா, சிம்பைடம், பெர்பெரிஸ், காரிகா, பாப்பையா, நிக்டான்ந்த்ஸ் போன்ற பல மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி மருத்துவர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் நன்கு ஆய்ந்த பின்னரே சரியான மருந்தைத் தேர்ந்தெடுக்க இயலும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மருந்துகளாலும் முறையான உடற்பயிற்சிகளாலும் முதுகுவலியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யலாம். <http://webulagam.com/health/homeopathy/2002/05/02_sinus.htm>
சைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு! - டாக்டர் நிர்மலா ஜெயராமன்
"சைனஸ்" என்றால் என்ன?
தலையின் மண்டை எலும்பில் மூக்குப் பகுதியில் உள்ள குழிக்கு "சைனஸ்" என்று பெயர். இந்தப் பாகங்களில் உள்ள குழிகளில் இரத்தம் அல்லது காற்று அடைப்பு என இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுவதைத்தான் சைனசிடிஸ் என்பார்கள். இதைத்தான் நாம் `சைனஸ்' பிரச்சனை என்கிறோம்.
எப்படிச் சிகிச்சை அளிக்கிறார்கள்?
குழிகள் அமைந்துள்ள எலும்புப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த வியாதியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதலாவது : கண்களுக்கு மேல் சுற்றி அமைந்துள்ள எலும்புப் பகுதி (ஆர்பிட்),மூக்கின் இரண்டு பக்கமுள்ள மேல் தாடை எலும்புப் பகுதி (மாக்ஸிலரி), மூக்கின் அடிப்பாகத்தில் சல்லடை போன்ற எலும்புப் பகுதி (எத்மாய்ட்) ஆகிய தலையின் முன் பக்கமுள்ள எலும்புக் குழிகள் பாதிப்பு "ஃப்ரண்டல் சைனஸ்" எனப்படும்.
முகத்தின் ஒவ்வொரு தாடையில் உள்ள எலும்புக் குழியின் உயரம் 3 செ.மீ. அகலம் 2.5 செ.மீ. ஆழம், 2 செ.மீ. உள்ளது. இதில் பெண்களைவிட, ஆண்களுக்கு சற்று அளவு அதிகமிருக்கும்.
இரண்டாவது : மூக்கின் பின்புறமுள்ள (தலையின் பின்பகுதி) "ஸ்ஃபினாய்ட்" என்ற எலும்புக் குழியில் பாதிப்பு உண்டாவதை "ஸ்ஃபினாய்டல் சைனஸ்" என்று கூறப்படுகிறது.
சைனஸ் நோய் அறிகுறிகள் :
இந்த இரண்டு விதமான பாதிப்புகளும், மூக்கின் மூலமாகச் சென்று தொற்றுகின்றன. ஒவ்வாமை, புகை, காஸ், தூசு நிறைந்த சுற்றுச்சூழல், அசுத்தமான தண்ணீரில் நீச்சல் அடிப்பது, மர வேலை செய்தல், சின்னம்மை, மூக்கினுள் சதை வளர்ச்சி ஆகிய காரணங்களால் வர வாய்ப்புள்ளது. கண்வலி, தலைவலி, முகவலி, காய்ச்சல், சளி, வாசனை உணர்வு இல்லாமை, மூச்சுத்திணறல் ஆகிய நோய்க்குறிகள் இருக்கும்.
ஹோமியோபதி மருந்து
ஹோமியோபதி மருத்துவத்தில் இவ்வியாதிகளுக்கான இரண்டு விதமான முக்கிய மருந்துகள் :
ஃப்ரண்டல் சைனஸ் :
யூகலிப்டஸ் ஜி, காலி பைக்ரோமிகம், டூக்ரியம்.
ஸ்ஃபினாய்டல் சைனஸ் :
ஆர்னிகா, ஹிபார் சல்ப், ஸ்டிக்டா.
(ஆங்கில மருந்து சாப்பிடும்போதும் இடையில் இம்மருந்துகள் சாப்பிடலாம்)
|
|
|
|
|
|
|
|
|
| ஆதாரம் - - டாக்டர். பாலபெரியசாமி |
|
|