முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஹோமியோபதி
 
ஒற்றைத் தலைவலி
Webdunia


வெறும் தலைவலியையே நம்மால் தாங்க முடியாத போது, ஒற்றைத் தலைவலியால் துடிப்பவர்களைப் பற்றி அவர்கள் படும் அவஸ்தையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஒற்றைத் தலைவலி என்றால் என்ன?

தலையில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைவதால் தமனி (ரத்தக் குழாய்) யின் சுவரையொட்டிய நரம்பு நுனிகள் அழுத்தப்பட்டு சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இதனால் தசை சுருக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தலையில் பாதிக்கப்பட்ட ஒரு புறம் தலைவலியாக அதிகரிக்கிறது.

தலைவலி ஏற்படக் காரணங்கள்?

மனஉளைச்சல், அதிக வேலைப்பளு, இரத்த அழுத்தம், பட்டினி கிடத்தல் ஆகியவை.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் :

காலை நேரத்தில் தூங்கி எழுந்ததும் ஒற்றைத் தலைவலி துவங்கும். கண்கள், கூசுதல், கண்ணில் நீர்வடிதல், கண் இருட்டாகத் தெரிதல் போன்ற அறிகுறிகள் முதலில் அரை மணி நேரம் இருக்கும். அதன்பிறகு தலைவலி ஆரம்பம் ஆகும். `வின்வின்' என்று சுத்தியால் அடிப்பது போல் தலையின் ஒருபுறம் கண் இமைக்கும் மேல் பாகத்தில் கடுமையாக வலிக்கும். தலைவலி வரும்போதெல்லாம் வலது பக்கமோ அல்லது தலையின் இடது பக்கமோ வந்த படியே இருக்கும். தலைவலி தாங்க முடியாமல் நோயாளி இருட்டறையில் படுத்துக் கொள்ள விரும்புவார். உணவு உண்ணமாட்டார். தலைவலியின் உச்ச கட்டத்தில் சிலருக்கு வாந்தி வரும். வேர்வையால் சோர்வடைந்து விடுவர்.

என்னிடம் 40 வயதுள்ள நோயாளி ஒருவர் ஒற்றைத் தலைவலியால் துடித்துக் கொண்டு வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் இடது பக்கத் தலைவலியால் மிகவும் அவஸ்தைப் படுவதாகவும் சொன்னார். ஒவ்வொரு ஆண்டின் பனிக்காலத்தில் தவறாமல் தினந்தோறும் காலையில் சுமார் 6 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்தவுடன் தலைவலி துவங்கிவிடும் என்றும், நேரம் ஆகஆக, வெயில் ஏறஏற இடது பக்கத் தலைவலி கடுமையாகி விடுகிறது என்றும் கூறினார். பின்னர் மாலை நேரத்தில் தலைவலி குறைந்து விடுகிறது என்றும் கூறினார்.

இவருக்கு இந்த இடது பக்கத் தலைவலி கடுமையாக உள்ள போது தனது இரண்டு கைகளால் நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் தனியாகச் சென்று அமர்ந்து விடுவாராம். காலை நேரத்தில் வலியால் உணவு கூட உண்பதில்லையாம்.

இந்த நோயாளிக்கு lachesis.200 வீரியத்தில் 10 வேளை மருந்தைக் கொடுத்து, தினமும் காலை, மாலை என இரண்டு வேளை வீதம் சாப்பிடச் சொன்னேன். நோயாளி மருந்தைச் சாப்பிட்டு ஒரு வாரம் கழித்து என்னிடம் வந்தார். தற்சமயம் இடது பக்கத் தலைவலி குறைந்துள்ளது என்றார். முன்னர் போல் கடுமையாக இல்லை என்றார். மீண்டும் Lachesis.200 வீரியத்தில் 10 வேளை மருந்தைக் கொடுத்து, தினமும் காலை மட்டும் ஒருமுறை சாப்பிட்டு வரச் சொன்னேன். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து என்னிடம் வந்தார். கடந்த ஒரு மாதமாக இடது பக்கத் தலைவலியே வரவில்லை என்றும் இன்றுதான் மீண்டும் அதே தலைவலி வந்து இருக்கிறது என்றும் சொன்னார்.

மீண்டும் Lachesis.1M வீரியத்தில் 4 Dose கொடுத்து, வாரம் ஒரு நாள் மட்டும் ஒரு வேளை மருந்து வீதம் நான்கு வாரங்கள் சாப்பிடச் சொன்னேன். அதன்பிறகு அவருக்கு இதுவரை இடது பக்க ஒற்றைத் தலைவலி வரவேயில்லை என்று சொல்கிறார்.

ஹோமியோபதி மருத்துவத்தில் நெற்றியின் இடது பக்கமாக வரும் ஒற்றைத் தலைவலிக்கு Lachesis, Bromium, Spigelia போன்ற மருந்துகளும் வலது பக்க ஒற்றைத் தலைவலி குணமாக Belladona, silica, Sangunaria போன்ற மருந்துகளையும் கொடுத்து குணமாக்கலாம். குணப்படுத்த முடியாத ஒற்றைத் தலைவலியை நிரந்தரமாக ஓடஓட விரட்டிவிடலாம்.
ஆதாரம் - - டாக்டர் ஏ. தண்டபாணி D.H.M.S.
மேலும்
மூலத்தை குணமாக்கும் ஹோமியோபதி
உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்யலாம்!
தலைவலி
இது கையில் இருந்தால் கவலை வேண்டாம்
ஹோமியோபதி மருந்துகள்!
பல் நோய்களுக்கு ஹோமியோ