மூலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் சக்தி வாய்ந்த ஹோமியோபதி மருந்தும், திசு மருந்து மற்றும் ஆயின்மென்ட்டும் இருக்கிறது.
சாதாரணமாக ஹோமியோபதி மருந்துகளை மூன்று அல்லது 4 வேளைகளில் சாப்பிடும் பொழுதே மூல நோயில் குணம் தெரிந்து விடும்.
நோயின் அறிகுறிகள் ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும். அதைப் பொறுத்து மருந்தும், வீரியமும் தீர்மானிக்கப்படுகின்றன. எந்தப் பக்க விளைவும் இல்லாமல், மூல நோயைக் குணப்படுத்த ஹோமியோபதியில் சிறப்பான மருந்துகள் உள்ளன.
மலச்சிக்கலைக் கட்டுப்படுத்த `நக்ஸ் வாமிகா' (Nux vomica) மற்றும் `ப்ரையோனியா' (Bryonia), காலையில் `சல்பர்' (sulphur), இரவில் `நக்ஸ் வாமிகா' (Nuxvomica) மலத்துடன் சீழ் வருவதைத் தடுக்க `சிலிகா' (Silica) மற்றும் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த `ஹமாமெலிஸ்' (Hamamelis) `மெலிலோடஸ்' (Melifolium) `மில்லிஃபோலியம்' (milifolium) போன்ற மருந்துகள் கைகொடுக்கும். ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து உட்கொண்டு நோய்க்குத் தீர்வு காணுங்கள்.
முக்கிய குறிப்பு : -
ஹோமியோபதி மருந்து சாப்பிடுகையில் காபி அருந்தக் கூடாது. இதேபோல் ஹோமியோபதி மருந்துகளின் அருகில் கற்பூரம் விக்ஸ், அமிர்தாஞ்சனம் போன்ற மருந்துகளை வைத்தால், ஹோமியோபதி மருந்துகளின் வீரியம் குறையும்.
|