முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஹோமியோபதி
 
பசியும், உணவில் விருப்பமும்!
Webdunia

பசி என்பது இரைப்பையில் தோன்றும் ஒரு தவிர்க்க இயலாத இயற்கையான உணர்வு. பசி வந்தால் சிலருக்கு ஒக்காளம், சிடுசிடுப்பு, தலைவலி மற்றும் களைப்பும் தோன்றலாம். இரைப்பைத் தசைகள் விட்டுவிட்டு கடுமையாகச் சுருங்குவதால் பசியுணர்வு தோன்றுகிறது. இரைப்பைத் தசையும் முன் சிறு குடல் தசையும் கொஞ்ச நேரத்திற்கு விட்டு விட்டு வேகமாகச் சுருங்கிய பின்பு ஓய்ந்துவிடும். இரைப்பையில் புற்று நோயிருந்தால் இவ்வாறு இரைப்பை சருங்காது. எனவே அவர்கள் பசியை உணர மாட்டார்கள்.

இரைப்பையின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட்டாலும் கூட பசியுணர்வு ஏற்படுகிறது. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பதால் பசி கொடுமையான உணர்வு.

உணவில் விருப்பம் : உணவில் விருப்பம் என்பது ஓர் இனிமையான உணர்வு, பசி வேறு, உணவில் விருப்பம் என்பது வேறு நல்ல உணவையும், சுவையான மணத்தையும் நுகரும்போது உண்ண வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். இதைத்தான் உணவில் விருப்பு என்று கூறுவர். உணவை உண்ண வேண்டும் என்ற விருப்பம் வாயிலும், மேலண்ணத்திலும் ஏற்படுகிறது. முகர்வு புலன் அழிந்துவிட்டால் உணவின் மீது விருப்பம் இருக்காது. இருப்பினும் பழக்கத்தின் காரணமாக உண்ணுவர். நரம்பியல் கோளாறுகள் காரணமாக சிலர் உணவினை வெறுப்பார்கள். இதனை நரம்பியல் அன்ன வெறுப்பு என்பர்.

மருத்துவம்

1. உணவில் வெறுப்புக்கு மருந்து : அபீஸ் நைக், ஆர்ஸ் - ஆல்ப், செலிடோனி, சைனா, சினினம் - ஆர்ஸ், லைகோ, நக்ஸ் - வா, பல்ஸ் மற்றும் ருஷ்-டாக்ஸ் ஆகியவையாகும்.

2. உணவு நன்றாக உண்டாலும் இளைத்து போகும் தன்மை உள்ளவர்களுக்கு அயோடியம் மற்றும் நேட் - மூர்.

3. உணவில் விருப்பு இருக்கிறது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போலத் தோன்றுகிறது என்றால் - சைனா, சைக்ளமென், லைகோ மற்றும் செபியா ஆகியவற்றில் பொருத்தமானதைக் கொடுக்கவும்.

4. உணவின் மீது நாட்டமே இல்லாதவர்கட்கு (குறிப்பாக குழந்தைகளுக்கு) இபிகாக், காலி-பை, நக்ஸ் - வா மற்றும் சைலீசியா கொடுக்கலாம்.

5. பால் மீது வெறுப்பு இருந்தால் - கார்போ வெஜ் அல்லது பாஸ்பாரிக் ஆசிட்.

நன்றி : டாக்டர் ச. சம்பத்குமார் (ஹோமியோபதி சிறப்பு மருத்துவர்)
நூல் : குடல் நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவம்
மேலும்
நாவழற்சிக்கு ஹோமியோபதி மருத்துவம்!
நாவடி நீர்க்கட்டி
ஹோமியோபதியின் பொதுவான 9 மருந்துகள்
கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள்
உடனடி சிகிச்சைக்கான சில ஹோமியோ மருந்துகள்
கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்