நாக்கின் மேற்புறத் திசுக்களில் அழற்சி ஏற்பட்டிருப்பதை நாவழற்சி (GLOSSITIS) என்கிறோம். சில நேரங்களில் நாக்கு முழுவதும் அழற்சியுற்று வீக்கம் ஏற்பட்டு சிவந்து சூடாக கடுமையான வலி ஏற்படும். இதனுடன் தொண்டையிலும், நாக்கிற்கு அடியிலும் உள்ள நிணநீர் சுரப்பிகள் வீக்கமும் ஏற்பட்டிருக்கும்.
இது ஏற்பட காரணங்கள் நிறைய உள்ளன. நாக்கிற்கு எரிச்சலூட்டும் நச்சு மருந்துகள் அல்லது பாதரசம் கலந்த மருந்துகளால் ஏற்படலாம், வைட்டமின் பி குறைவினால் தோல் வறட்சி என்ற பெல்லகரா நோயினாலும் நாவழற்சி ஏற்படலாம். மேகவெட்டை நோயின் மூன்றாம் நிலையிலும், நாவழற்சி பரவலாக தோன்றும், வாயில் நோய், பூச்சிப்பல், குடற்காய்ச்சல், நுரையீரல் அழற்சி, குடலழற்சி மற்றும் அம்மை நோயினும் நாவழற்சி உடன் நோயாக தோன்றும்.
இது ஏற்படும் போது நாக்கு நன்றாக சிவந்து வீங்கி இருக்கும், சிலருக்கு வீக்கம் பெரிதாகி மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். நாக்கு இறுகிப் போவதும் உண்டு.
இதற்கு ஹோமியோபதி மருத்துவ முறையில் அபிஸ் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதாவது வீக்கம், ஈறுவீக்கம், பெல்லகரா நிலை, வைட்டமின் பி சத்து குறைவால் நாக்கு சிவத்தல் போன்றவற்றிற்கு இம்மருந்து எற்றது.
நாக்கு அழற்சிக்கு முக்கிய மருந்து சல்ப்யூரிக் ஆசிட், லெகேசிஸ், மூரியாடிக் ஆசிட் மருந்துகளையும் நோயின் தன்மைக் கேற்ப கொடுக்கலாம்.
குறிப்பாக வைட்டமின் பி சத்துணவு பழங்கள், காய்கறிகளை கொடுத்து வர வேண்டும், மேலும் விவரங்களுக்கு உங்கள் ஹோமியோ மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.
|