இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (தமனி) அடைபடுவதால், இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, அந்த பகுதி செயலிழந்து போகிறது. இதைத்தான் மாரடைப்பு என்று கூறுகிறார்கள்.
ரத்த ஓட்டத் தடை என்பது பெரும்பாலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தால் வருகிறது. உடலில் அதிகமான கொழுப்பு சேரும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட மேலும் பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மன உளைச்சல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணங்களாகின்றன.