பொதுவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் அதிகாலையில் ஏற்படுகின்றன. இருதயத்தில் ரத்தம் உறைதல் அல்லது அடைத்தல் ஆகியவற்றின் காரணத்திலேயே இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதிகாலை நேரத்தில், இதுபோன்று மாரடைப்பு, பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது என்று வாஷிங்டனில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.
அதில் அதிகாலை நேரத்தில் ரத்த நாளங்கள் செயல்பாடு குறைந்து காணப்படுவதே காரணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
எண்டோதீலியல் என்னும் செல்கள், ரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்கும் இடையே (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்படுகின்றன.
இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு, ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பு ஆகியவற்றை தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகிறது.
அதிகாலை நேரத்தில் இவற்றின் செயல்பாடுகள் குறைவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. |