பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் காலை உணவைத் தவிர்ப்பதும் ஒன்றாகும். மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என்றில்லாமல் இல்லத்தரசிகளும் காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர்.
நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.
அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். |