இய‌ற்கை வைத்தியம் | வியாதிகள் | கட்டுரைகள் | பாலியல் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள் | மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு | A(H1N1)
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » வியாதிகள் » 22 பே‌ரி‌ல் ஒருவரு‌க்கு மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் அபாய‌ம் (Breast Cancer in India)
Feedback Print Bookmark and Share
 
இ‌ந்‌திய பெ‌ண்‌க‌ளி‌ல் 22 பே‌ரி‌ல் ஒருவரு‌க்கு மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக இ‌ந்‌திய மரு‌த்துவ ஆரா‌ய்‌ச்‌சி கல‌ந்தா‌ய்வு அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந‌திய மரு‌த்துவ ஆரா‌ய்‌ச்‌‌சி கல‌ந்தா‌ய் அ‌றி‌க்கை நே‌ற்று வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது. அ‌ந்த ஆ‌ய்வு அ‌றி‌க்கை‌யி‌ல், வா‌ழ்‌க்கை முறை மா‌றி வருவதா‌ல் பு‌ற்று நோ‌ய் பா‌தி‌ப்பு அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

கு‌றி‌ப்பாக, மாநகர‌ப் பகு‌திக‌ளி‌ல் வ‌சி‌க்கு‌ம் பெ‌ண்களு‌க்கு அ‌திக அள‌வி‌ல் மா‌ர்பக பு‌‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. உட‌ற்ப‌யி‌ற்‌சி இ‌ல்லாமை, உட‌ல் பரும‌ன், ர‌த்த‌த்‌தி‌ல் அ‌திக ச‌ர்‌க்கரை, ‌நீ‌ரி‌‌ழிவு நோ‌ய், குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்வதை த‌ள்‌ளி‌ப் போடுத‌ல், தா‌ய்‌ப்பா‌ல் தருவதை த‌வி‌ர்‌த்த‌ல் ஆ‌கியவையே இத‌ற்கு மு‌க்‌கி‌ய‌க் காரண‌ங்களாகு‌ம்.

மேலு‌ம், மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் ப‌ற்‌றிய ‌வி‌ழி‌ப்புண‌ர்வு இ‌ல்லாதது, பா‌லிய‌ல் க‌ல்‌வி இ‌ல்லாதது, குழ‌ந்தை பெறுத‌ல் ப‌ற்‌றிய போ‌திய அ‌றிவு இ‌ல்லாதது ‌ஆ‌கியவையு‌ம் பு‌ற்று நோ‌ய் வருவத‌ற்கு வ‌ழிவகு‌க்‌கி‌ன்றன.

மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்ப‌ட்டா‌ல் தொட‌க்க ‌நிலை‌யி‌ல் எ‌ந்த வ‌லியு‌ம் இரு‌க்காது. ஆனா‌ல் அது வளர வளர அத‌ன் அ‌றிகு‌றிகளை உணர முடியு‌ம். எனவே, மா‌ர்பக பு‌ற்றுநோயை க‌ண்ட‌றிவத‌ற்கான சுய ப‌ரிசோதனையை எ‌வ்வாறு செ‌ய்வது எ‌ன்பது கு‌றி‌த்து பெ‌ண்க‌ள் அ‌றி‌ந்து கொ‌ண்டு, கவனமாக செய‌ல்ப‌ட்டா‌ல் ஆர‌ம்ப‌த்‌திலேயே க‌ண்ட‌றி‌ந்து உ‌ரிய ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம். எ‌ந்த நோயு‌ம் மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌த்தாலு‌ம் பய‌ன் இரு‌க்காது எ‌ன்பதை அ‌றிவோ‌ம். அதுபோல‌த்தா‌ன், மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோயு‌ம் மு‌ற்‌றி ‌வி‌ட்டா‌ல் உ‌‌யிரையே‌ப் ப‌றிகொடு‌க்க வே‌ண்டி வரு‌ம்.

இ‌ந்த நோ‌யி‌ன் தா‌க்க‌ம் த‌ற்போது ‌கிராம‌ப்புற‌ங்க‌ளிலு‌ம் அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. உலக‌ம் முழுவது‌ம் கட‌ந்த ஆ‌ண்டி‌ல் 13 ல‌ட்ச‌ம் பெ‌ண்களு‌க்கு மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது என ஆ‌ய்‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்