முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > வியாதிகள்
 
நாள் தவறும் மாதவிடாய்கள்!
Webdunia
மாதவிடாய் சுழற்சி பெண்ணுக்கு பெண் மாறுபடும் தன்மை கொண்டது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ மாதவிடாய் ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது சகஜம். இது நார்மல் என்று கருதப்படுகிறது.

மாதவிடாய் ரத்தப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். சாதாரணமாக ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்று அர்த்தம். இதுவே 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்று பொருள்.

காரணம் என்ன?

1. கருத்தரிப்பு : கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். பல மாதங்களுக்கு முன் பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்திருந்தீர்களானால், உங்கள் மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

2. கவலை : மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய இளம் பெண்களுக்கு இது சகஜமாக ஏற்படுகிறது. இது உணர்ச்சிவசப்படுவதாலோ அல்லது மன நெருக்கடியாலோ, கவலையாலோ ஏற்படலாம். அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும். சில சமயங்களில் ஊருக்குச் செல்லுதலால் கூட மாதவிடாய் தாமதப்படலாம்.

3. சாதாரண நடைமுறை : மாதவிடாய் ஏற்படத்துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு நாள் தவறிய தாமதமான மாதவிடாய் சுழற்சியே இளம் பெண்களுக்கு இருந்து வரும். இந்தக் காலக் கட்டங்களில் உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

இதனால் மாதவிடாய் சுழற்சி முறையற்றதாக இருக்கும். அதாவது 2 வாரங்களிலிருந்து 3 மாதங்கள் வரை முறையற்ற மாதவிடாய் இருந்து வரும்.

4. ஹார்மோன் சமச்சீரின்மை : தவறும் மாதவிடாய்க்கு ஹார்மோன்களின் சமச்சீரின்மை அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் இளம் பெண்களிடையே மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் ஒரு ஹார்மோன் சமச்சீரின்மை நோய்க்கூறாகும். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் முறையற்ற மாதவிடாய்ச் சுழற்சியையும், உடலில் அதிகமாக முடி முளைப்பதையும், எடை அதிகரிப்பையும் பரு முதலியவற்றையும் தோற்றுவிக்கிறது. சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும், தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.

எப்போது சரியாகும்?

மனக்கவலை, உடற்சோர்வு ஆகியவை காரணமாக இருந்தால் விரைவில் மாதவிடாய் சுழற்சி நார்மலாகிவிடும். சாதாரண நடைமுறைகளின்படி இளம்பெண்களின் ஹார்மோன்கள் அளவு முதிர்ந்த நிலையிலும், ஒத்திசைவு கொண்டு இருப்பதாலும் மாதவிடாய் சுழற்சி சகஜமான நிலையில் இருந்து வரும்.

மருத்துவர்கள் பொதுவாக சமச்சீரற்ற ஹார்மோன்களுக்கே சிகிச்சை செய்கின்றனர். இவையெல்லாம் இல்லாத வேறு புதிரான காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனினும் வேறு அபாயகரமான காரணம் இருக்கிறதா என்பதை அறிய உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகுவது சிறந்தது.
மேலும்
வழுக்கை விழுகிறதா? - இதோ சில யோசனைகள்
காதுகேளாமை குறைபாடு - சிகிச்சை முறைகள்!
தோள்பட்டை வலிகளுக்கு ஒரு எளிய தீர்வு!
மார்பக புற்றுநோய்
மூட்டு வலிக்கு முடிவு
வைரஸ் நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சிகிச்சை!