இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது இதயத்தின் சுருங்கும் தன்மை இயல்பாக இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தினை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு இதயத்தின் பணி கடினமாக ஆகி விடுவதால் நாளடைவில் இதயம் பலகீனப்பட்டு இதயத்தின் சுருங்கி விரிகின்ற தன்மை செயலிழந்து விடுகின்றது. இதை தான் இதய சுழற்சி ஹார்ட் பெயிலியர்-இதயச் செயலிழப்பு என்று சொல்கிறோம்.
இதயத்தின் இயல்பு நிலை மாறி அதனுடைய செயல்திறன் குறைந்து விடுவதனால் தான் நடக்கின்ற போது மூச்சிரைப்பு, படுத்தவுடன் ஏற்படுகின்ற நெஞ்சடைப்பு, இருமல், மூச்சிரைப்பு, அதிகமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் இதயத்தின் இடது வெண்டிரிக்கிள் (Left Ventricle) விரிவடைந்து அதனுடைய சதைகள் சீர்க்குலைந்து பாதிப்பேற்படுகின்றது. இரத்தக் கொதிப்பு தான் மாரடைப்பிற்கு முக்கியக் காரணம்.
எனவே இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் மாரடைப்பு இதய செயலிழப்பு மற்றும் இதயவீக்கம் ஏற்படக் கூடும். இதனால் பலவிதமான இன்னல்களுக்கும் உடல்நிலை ஆளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
|